சுய நினைவுக்கு வந்த ஆகாஷ்.! சிப்பிக்குள் முத்து சீரியல் இன்றைய எபிசோட்..

விஜய் தொலைக்காட்சியில் தினமும் மதியம் 6 மணி அளவில் ஒளிபரப்பப்படும் நாடகமான சிப்பிக்குள் முத்து வர வர வித்தியாசமாக சென்று கொண்டிருக்கிறது என்று கூறலாம், ஆரம்பத்தில் இந்த நாடகத்தில் அக்கா தனது தங்கை நினைத்த வாழ்க்கையை அவள் வாழ வேண்டும் என்பதற்காக தன்னுடைய வாழ்க்கையை மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு நபருடன் வாழ முடிவு செய்கிறார்.

இந்த மனநலம் பாதிக்கப்பட்ட நபர் வேறு யாருமில்லை இவளது தங்கைக்கு கணவராக வரப்போகும் மாப்பிள்ளையின் அண்ணன் ஆவார், என்னதான் இந்த நாடகத்தில் இவர் மனநலம் பாதிக்கப்பட்டவராக நடித்தாலும் ஒரு சில காட்சிகளை பார்க்கும் பொழுது சற்று வித்தியாசமாக தான் இருக்கிறது.
இதைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமானால் எம்டி ஹேண்ட் என்னும் யூட்யூப் சேனல் இந்த நாடகத்தை வச்சு செய்து இருப்பார்கள்.

ஏன் தற்பொழுது வெளியான வீடியோவில் கூட அப்படி சற்று வித்தியாசமாகத் தான் தெரியும், மேலும் இதையெல்லாம் தாண்டி விஜய் தொலைக்காட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த வீடியோவிற்கு “என்னலே நடக்குது இங்க” என்று அவர்களே இப்படி ஒரு தலைப்பு கொடுத்துள்ளனர்‌.

இப்படிப்பட்ட நிலையில் வாணி எப்படியாவது தனது கணவர் ஆகாஷை பழைய நிலைமைக்கு கொண்டு வர வேண்டும் என தனது உயிரையும் பணைய வைத்து வருகிறார். ஆனால் வாணிக்கு எதிராக பலரும் திட்டம் செய்து வருகிறார்கள்.

இவர் கஷ்டப்படுவதை பார்க்கும் வாணியின் தங்கை தன்னால்தான் இவ்வளவு பிரச்சனையும் எனக் கூறி தனது அக்காவின் வாழ்க்கையை நெனச்சு வருத்தப்படுகிறார். மேலும் வாணி தொடர்ந்து பல கஷ்டங்களில் இருந்து வந்ததால் அவருக்கு உதவி புரியும் வகையில் காற்றுக்கென்ன வேலி சீரியல் நடிகை வெண்ணிலா என்று கொடுத்திருந்தார்.

இப்படிப்பட்ட நிலை பல பிரச்சினைகளுக்குப் பிறகு ஆகாஷ் தனது பழைய நிலைமைக்கு வந்துள்ளார் மேலும் அவருக்கு அனைத்தும் ஞாபகம் வந்துள்ளது அது குறித்த ப்ரோமோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது இப்படிப்பட்ட நிலையில் ஆகாஷ் மனநிலை சரியான நிலையில் அவர் வாணியை தனது மனைவியாக ஏற்றுக் கொள்வாரா என்பது இனிமேல் தான் தெரிய வரும்.

Leave a Comment