குணசேகரன் இல்லாததால் TRP யில் எதிர்நீச்சலை தட்டி தூக்கி NO.1 இடத்தை பிடித்த விஜய் டிவி சீரியல்

TRP Rating : வெள்ளி திரையில் எப்படி படங்கள் போட்டி போட்டுக் கொள்கிறதோ அதேபோல சின்னத்திரை ரியாலிட்டி ஷோ மற்றும் புதுப்புது சீரியல்களை வெளியிட்டு மக்கள் மற்றும் ரசிகர்களை கவர்ந்து டி ஆர் பி எல் நம்பர் ஒன் இடத்தை பிடிக்க போட்டி போடுகின்றனர்.

வாராவாரம் டி ஆர் பி எல் யார் நம்பர் ஒன் என்பதை  தெரிந்து கொள்ள ரசிகர்களும் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர் இந்த நிலையில்  கடந்த வாரத்திற்கான சீரியலுக்கான டிஆர்பி ரேட்டிங் விவரம் வெளியாகி உள்ளது அதன்படி பார்க்கையில் மக்கள் மத்தியில் கடந்த வாரத்தில் ரசிகர்களை அதிகம் கவர்ந்து  நம்பர் ஒன் இடத்தை பிடித்துள்ளது சிறகடிக்க ஆசை சீரியல்.

இந்த சீரியலில் தொடர்ந்து விறுவிறுப்பாக பஞ்சம் இல்லாமல் இருப்பதால் இல்லத்தரசிகளையும் தாண்டி  ரசிகர்களும் இதை பார்த்து கண்டு களித்து வருகின்றனர். அதனால் முதல் இடத்தில் இருக்கிறது அடுத்த இடத்தில் பாக்கியலட்சுமி, மூன்றாவது இடத்தில் பாண்டியன் ஸ்டோர், நான்காவது ஆஹாகல்யாணம், ஐந்தாவது ஈரமான ரோஜா..

siragadikka aasai
siragadikka aasai

முதல் ஐந்து இடத்தில் எதிர்நீச்சல் சீரியல் இடம் பிடிக்கவில்லை இதுவே பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இதைப் பார்த்த ரசிகர்கள்  மாரிமுத்துவின் மறைவுக்கு பின்  எதிர்நீச்சல் சீரியலை நிறைய பேர் பார்த்தே இல்லை என்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது.

அவரது இடத்தில் இனி எத்தனை பேர் வந்து நடித்தாலும் அவர் போல் நடிக்க முடியாது எனக் கூறியும் கமெண்ட் அடித்து வருகின்றனர். இனி எதிர்நீச்சல் சீரியல் நிலைமை.. பொறுத்து இருந்து பார்போம் என்ன வேண்டுமானாலும் நடக்கும்.