ரேட்டிங்கில் அடித்து தூக்கிய விஜய் டிவியின் புதிய சீரியல்.!

0

விஜய் டிவி, சன் டிவி, ஜீ தமிழ், கலர்ஸ் தமிழ் இந்த நான்கு தொலைக்காட்சிகளும் போட்டி போட்டுக்கொண்டு நல்ல தரமான கதை உள்ள ரசிகர்கள் விரும்பும் வகையில் பல சீரியல்களை ஒளிபரப்பி வருகிறார்கள். அதோடு மட்டுமல்லாமல் கவர்ச்சியில் ஆர்வம் உள்ள பல புதுமுக நடிகைகள் மற்றும் நடிகர்களையும் அறிமுகப்படுத்தி வருகிறார்கள்.

ரசிகர்கள் விரும்பும் வகையில் அதிகபடியான காதல் காட்சிகள் இடம் பெறுவது போலவும் சுவாரசியமாகவும், சுறுசுறுப்பாகவும் இருப்பது போலவும் சீரியல்களை இயக்கி வருகிறார்கள். எனவே தற்போது உள்ள ரசிகர்களும் வெள்ளித்திரையை விட சின்னத்திரையில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள்.

இப்படிப்பட்ட நிலையில் ஒரு வாரம் முடிந்ததும் டிஆர்பி-யில் எந்த நாடகம் முன்னணி வலிக்கிறது என்று தகவல் வெளியாவது வழக்கமாக இருக்கிறது. அந்த வகையில் இந்த வாரத்தினைப் பற்றிய தகவல் நேற்று வந்துள்ளது. அதில் டிஆர்பி-யில் டாப்பில் ரோஜா சீரியல் இடம்பெற்றிருந்தது.

இதனைத் தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதிகண்ணம்மா தான் தொடர்ந்து முன்னணி வகித்து வந்தது ஆனால் இந்த சீரியலை ஓவர்டேக் செய்து புதிதாக அறிமுகமாகியுள்ள பாக்கியலட்சுமி சீரியல் நம்பர் 1 சீரியல் லிஸ்டில் இடம் பெற்றுள்ளது.

பாரதிகண்ணம்மா சீரியல் ரசிகர்கள் சோகத்தில் இருந்து வந்தாலும் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்கள் இதனை கொண்டாடி வருகிறார்கள்.அந்த வகையில் இணையதளத்தில் ரசிகர்கள் பலரும் இதனைப் பற்றிய கருத்துக்களை தெரிவித்து வந்தார்கள். அதில் பெரும்பாலானோர் இந்த சீரியல் டாப்பில் வருவதற்கு கோபி கேரக்டரில் வரும் சதீஷ்க்கு தான் இந்த புகழ் அனைத்தும் சேரும் என்று கூறி உள்ளார்கள்.