விஜய் டிவியில் பல சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அந்த வகையில் தற்போது TRPயில் முன்னணி நாடகமாக விளங்குவது பாரதிகண்ணம்மா சீரியல்.
இந்த சீரியல் குடும்ப கதையையும், ஒரு பெண் எவ்வளவு தைரியமாக இருக்க வேண்டும் என்பதையும் மையமாக வைத்து இயக்கப்படுவதால் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்கள் மற்றும் குடும்ப இல்லத்தரசிகள் என்ற அனைவருக்கும் பிடித்த நாடகமாக விளங்குகிறது .
இந்த சீரியலில் சில புதிய முக நடிகைகளும் அறிமுகமாகி உள்ளார்கள். அந்த வகையில் கண்ணம்மா கேரக்டரில் ரோஷினி என்ற பெண் நடித்து வருகிறார். இவர் புதிய நடிகையாக அறிமுகமாகி இருந்தாலும் இவருக்கும் நம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இதனைத் தொடர்ந்து ஹீரோவாக அருண் மற்றும் வெள்ளித் திரையில் இருந்து சில பிரபலங்களும் இந்த சீரியலில் நடித்து வருகிறார்கள். இந்த சீரியளை இயக்குபவர் பிரவீன் தான் இயக்கி வருகிறார்.
இவர் இந்த சீரியலுக்கு முன்பு இதே விஜய் டிவியில் மாபெரும் வெற்றி பெற்ற சரவணன் மீனாட்சி மற்றும் ராஜா ராணி ஒன்று போன்ற சீரியல்களையும் இயக்கியுள்ளார். இவர் தற்போது தனது மனைவி மற்றும் மகனுடன் இருக்கும் புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

இவருடைய மனைவி வேறு யாருமில்லை விஜய் டிவியில் ஒளிபரப்பாகி இளசுகளின் மனதை வெகுவாக கவர்ந்த சீரியல் கனா காணும் காலங்கள். இந்த சீரியலில் நடிகை சாய் பிரமோதித்தா நடித்திருந்தார் இவரை தான் இயக்குனர் பிரவீன் காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

இவர்களுக்கு தற்போது இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளார்கள் . தற்போது இவர்கள் இருவரும் இணைந்து எடுத்த புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.