தமிழ் தொலைக்காட்சிகளில் டிஆர்பி-யில் முதல் இடம் பிடிப்பதற்காக பல தொலைக்காட்சிகள் புதிதுபுதிதாக சீரியலை ஒளிபரப்பி வருகிறார்கள், சமீபகாலமாக பல தொலைக்காட்சிகள் படத்தின் தலைப்பை வைத்து சீரியலை வெளியிட்டு வெற்றி கண்டு வருகிறார்கள், அந்தவகையில் விஜய் தொலைக்காட்சி மௌன ராகம், சின்னதம்பி, அரண்மனைக்கிளி, அஞ்சலி, கடைக்குட்டி சிங்கம், ராஜா ராணி என படத்தின் டைட்டில் வரிசையில் பாரதி கண்ணம்மா என்ற சீரியல் கடந்த பிப்ரவரி மாதம் முதல் ஒளிபரப்பாகி வருகிறது.

அதேபோல் தொலைக்காட்சிகளில் பல கொரியன் தொடரை டப் செய்து வரும் தொலைக் காட்சிகளுக்கு மத்தியில் வங்காள சீரியலை தழுவி பாரதிகண்ணம்மா சீரியல் எடுக்கப்பட்டு வருகிறது, இந்த சீரியலில் பாரதி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகை ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்துள்ளார். இவரின் பெயர் ரோஷினி, பாரதிகண்ணம்மா சீரியலுக்கு முன்பு பல்வேறு விளம்பரங்களில் மாடலாக நடித்துள்ளார்.

பாரதிகண்ணம்மா சீரியலில் இந்த நடிகையை பார்த்தால் கையெடுத்து கும்பிடும் குடும்ப பாங்கான பெண்ணாக நடித்து வந்தார், ஆனால் தற்போது சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

ஏனென்றால் மாடர்ன் உடைகளில் இவர் கவர்ச்சியில் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது இதை பார்த்த ரசிகர்கள் என்னம்மா இது என புலம்புகிறார்கள் ரசிகர்கள்.

