அஜித்தின் வலிமை படத்தில் இணையும் விஜய் டிவி சீரியல் நடிகை.!வீடியோ உள்ளே!!

தமிழ் தமிழ் திரையுலகில் உச்சத்தில் நின்று கொண்டிருப்பவர் தல அஜித். இவருக்கென என ஒரு சாம்ராஜ்யமே இருக்கு என்றே சொல்லலாம். ஏனென்றால் அந்த அளவிற்கு ரசிகர்கள் உண்டு என்பதே நிதர்சனமான உண்மை. இவர் கடந்த ஆண்டு நடித்து வெளிவந்த விசுவாசம் மற்றும் நேர்கொண்டபார்வை போன்ற படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்றதோடு மட்டுமல்லாமல் மக்கள் மத்தியிலும் ரியல் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது. மட்டுமில்லாமல் இப்படம் வசூல் ரீதியாகவும் வணிக ரீதியாகவும் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

நேர்கொண்ட பார்வை படம் பெண்களை தவறாக சித்தரிக்க கூடாது என்பதை விளக்கும் விதமாக படம் எடுக்கப்பட்டு இருந்தது இதனை பெண் ரசிகைகளும் மற்றும் பொதுமக்களும் வெகுவாக பாராட்டி இருந்தனர்.
இப்பொழுது அஜித் அவர்கள் வலிமை படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படத்துக்கு வினோத் அவர்கள் இயக்குகிறார். போனி கபூர் அவர்கள் இப்படத்தை தயாரிக்கிறார். நேர்கொண்ட பார்வை படத்துக்கு இயற்றியவர்களே இப்படத்திலும் பணியாற்றி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தில் ஹீரோயின் வில்லன் மற்றும் காமெடியான யார் யார் நடிக்கிறார்கள் என்பது மர்மமாகவே இருந்து வருகிறது. அதுபோல இந்த படத்தைப்பற்றி இதுவரையும் எந்த ஒரு தகவலும் வெளிவராத நிலையே ஏற்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் எடுக்கப்பட்டு வருகிறது இதனைத்தொடர்ந்து அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் எடுக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் போனிகபூர் அவர்கள் விழா நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய பொழுது அவர்கள் இப்படத்தில் இரட்டை கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்றும் மற்றும் அவர் போலீசாக நடிக்கிறார் என அவர் தெரிவித்ததாக ஊடகங்கள் கூறுகின்றன. வலிமை படத்தில் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் பைக் ரேஸ் கண்டிப்பாக இடம் பெற்று உள்ளன எனவும் தெரிவிக்கின்றன.

https://twitter.com/jacquline_vj/status/1232348877992284161

இப்படத்தில் உமா குரேஷி, நவதீப் மற்றும் பல பிரபலங்கள் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது இருப்பினும் படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இப்படத்தில் ஸ்டேபி  நடிக்கிறார் என தகவல் தளங்களில் பகிரப்பட்டு வந்த நிலையில் இவர் தற்போது பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

அது என்னவென்றால் வலிமை படத்தின் மூன்றாவது கட்ட படப்பிடிப்பில் நான் தல அஜித் அவர்கள் நடிக்க உள்ளேன் என்றும் கூறி உள்ளார். நான் தல அஜித் அவர்களின் தீவிர ரசிகை எனவும் எப்படியாவது அவருடன் சேர்ந்து நடிக்க என எதிர்பார்த்து இருந்தேன் தற்போது அமைந்துள்ள எனவும் அவர் கூறியுள்ளார்.ஸ்டேபி அவர்கள் பிரபல தொலைக்காட்சி சீரியல் ஒன்றில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

https://twitter.com/ThalaAjith_FC/status/1232311877855670274?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1232311877855670274&ref_url=https%3A%2F%2Ftamil.behindtalkies.com%2Fthenmozhi-ba-serial-actress-stefy-joins-ajiths-valimai%2F

Leave a Comment