தமிழ் சின்னத்திரையில் ஏராளமான தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றி வந்து கடைசியில் விஜய் டிவியில் ஐக்கியமானவர் தான் தொகுப்பாளினி ஜாக்குலின். இவர் கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியில் ரக்ஷனுடன் இணைந்து பணியாற்றி ரசிகர்கள் மனதை வெகுவாக கவர்ந்தார்.
இதே போல் நடித்து வந்த இவருக்கு விஜய் டிவி சீரியல்களில் நடிப்பதற்கான வாய்ப்பை வழங்கியது. அந்த வகையில் நிறைவடைந்த தேன்மொழி பிஏ சீரியலில் கதாநாயகியாக நடித்து பிரபலமடைந்தார். இவ்வாறு சின்னத்திரை நடிகையாக மாறிய அவர் சமீபகாலமாக பெரிதாக சின்னத்திரையில் தலை காட்டாமல் இருந்து வருகிறார்.

சின்னத்திரை நடிக்கவில்லை என்றாலும் வெள்ளித்திரையிலும் இவருக்கு தொடர்ந்து திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு வாய்ப்புகள் கிடைத்து வருகிறது. பிறகு சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் என பலவற்றையும் வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் தாய்லாந்துக்கு சுற்றுலா சென்றுள்ளார். அவ்வபொழுது டைகர் பார்க் சென்று உண்மையான புலி அருகில் இருக்கும் நிலையில் அப்பொழுது அந்த புலியுடன் செல்ஃபி ஒன்றை எடுத்துள்ளார். அதனைப் பார்த்த ரசிகர்கள் அந்த டைகர் உண்மையா பொய்யா என்று சந்தேகப்பட்டு வருகிறார்கள். அப்படி உண்மை என்றால் ஜாக்குலினுக்கு ரொம்ப தைரியம் தான் என்றும் கமெண்ட் செய்து வருகிறார்கள்.