தனது மனைவியை முதன்முறையாக விருது விழாவிற்கு அழைத்து வந்த தொகுப்பாளர் ரக்சன்.!

திரை உலகை பொறுத்தவரை எப்படியாவது பிரபலமடைய வேண்டும் என பலரும் போராடிவருகிறார்கள் அதுமட்டுமில்லாமல் சினிமா நடிகர் மற்றும் நடிகைகளுக்கு இணையாக தொகுப்பாளினி மற்றும் சீரியல் நடிகைகள் தொகுப்பாளர்கள் என அனைவரும் வெள்ளித்திரையில் நுழைய வேண்டும் என போராடி வருகிறார்கள்.

இந்த நிலையில் மக்களிடம் பிரபலமடைய வேண்டும் எனவும் பல தொகுப்பாளர் மற்றும் தொகுப்பாளினிகள் ஏங்கியது உண்டு அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் வளர்ந்துவரும் தொகுப்பாளர்களில் ஒருவர் ரக்சன். இவர் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம்  தொகுப்பாளராக மக்களால் அறியப்பட்டவர்.

அதன்பிறகு சின்ன சின்ன நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த இவருக்கு கோமாளி என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் வாய்ப்பு கிடைத்தது. அதுமட்டுமில்லாமல் இந்த நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனையும் வெற்றிகரமாக தொகுத்து வழங்கி வருகிறார்.

பொதுவாக ரக்ஷானுக்கு  இன்னும் திருமணம் ஆகவில்லை என்று தான் நாம் பலரும் நினைத்துக் கொண்டிருந்தோம் ஏனென்றால் அவருடைய சொந்த விஷயம் பற்றி எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை.  ஆனால் உண்மையில் அவருக்கு திருமணம் நடந்து முடிந்து ஒரு குழந்தைகூட இருக்கிறதாம்.

அவரின் மனைவியை இதுவரை கேமரா பக்கம் காட்டியதே கிடையாதாம் அதுமட்டுமில்லாமல் அவருடைய மனைவி கேமராவை விரும்பாதவர் அதனால் இந்த விஷயத்தை வெளியே கூறியதே கிடையாது இந்த நிலையில் தொகுப்பாளர் ரக்சன் தன்னுடைய மனைவியுடன் முதன்முறையாக விஜய் டிவி விருதிற்கு வந்துள்ளார்.

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது இணையதளத்தில் படுவேகமாக வைரலாகி வருகிறது.

rakshan

Leave a Comment

Exit mobile version