விஜய் டிவி ரக்ஷன் மனைவியை பார்த்திருப்பீர்கள் அவரின் அக்காவை பார்த்துள்ளீர்களா.! இதோ அவர் வெளியிட்ட புகைப்படம்.!

பொதுவாக தொலைக்காட்சிகளில் பணியாற்றி வரும் பெண் தொகுப்பாளர் களுக்கு அதிக ரசிகர் பட்டாளம் இருப்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான் அதேபோல் ஆண் தொகுப்பாளர்களும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்து விடுகிறார்கள். அப்படி விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றி வந்த ரக்சன் அவர்களை ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும்.

இவர் தொகுப்பாளராக மட்டுமல்லாமல் ஒரு சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார் இவர் முதன்முதலில் ராஜ் தொலைக்காட்சியிலும் கலைஞர் தொலைக்காட்சிகளிலும் தொகுப்பாளராக பணியாற்றி வந்தார் அதன்பிறகு இவருக்கு மிகப் பெரிய அங்கீகாரத்தை கொடுத்தது விஜய் தொலைக்காட்சி தான்.  விஜய் தொலைக்காட்சியில் கலக்கப்போவது யாரு என்ற காமெடி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி அதன் மூலம் ரசிகர்களிடையே மிகவும் பிரபலம் அடைந்தார்.

இந்த நிலையில் தற்போது குக் வித் கோமாளி  நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிலையில் மக்களிடையே பிரபலம் அடைந்த ரக்க்ஷன் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியாகிய கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என்ற திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரையில் கால் தடம் பதித்தார். ரக்சன் அவர்கள் கொக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளிகளும் போட்டியாளர்களும் தங்களுடைய வாழ்க்கையில் நடந்த காதல் பற்றி கூறி வந்தார்கள்.

அப்படி கூறி வந்த நிலையில் ரக்சன் அவர்களும் கல்யாணம் லவ் மேரேஜ்தான் எனக்கூறினார். அங்கிருந்த பல போட்டியாளர்களும் காமெடிக்காக தான் என்று நினைத்துக் கொண்டிருந்தார்கள். அதுமட்டுமில்லாமல் விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றிய பொழுது தொகுப்பாளினி ஜாக்குலின் அவர்களுடன் கிசுகிசுக்கப்பட்ட பொழுதுகூட தனக்கு திருமணம் ஆகி விட்டதை வெளியே கூறவில்லை.

rakshan
rakshan

அதேபோல் மறைந்த சித்ரா உடன் டேட்டிங் சென்றதாக சித்ரா மறைவிற்குப் பிறகு சர்ச்சை கிளம்பியது அப்போதுகூட திருமணமானம் ஆனதை அவர் சொல்லவில்லை. ஆனால் சமீபத்தில் சமூக வலைத்தளத்தில் தன்னுடைய மனைவி புகைப்படத்தை முதன்முறையாக வெளியிட்டார். இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற ரக்சன் என் மனைவிக்கு மீடியாவில் முகம் காட்ட விருப்பம் இல்லை அதனால் எந்த ஒரு நிகழ்ச்சிக்கும் அவரை நான் அழைத்து வருவதே கிடையாது எனக் கூறினார்.

ரக்சன் அவர்களுக்கு மனைவி இருப்பது இப்போதுதான் தெரியும் ஆனால் அவருக்கு ஒரு அக்கா இருக்கிறார் என்பது தற்பொழுது எத்தனை பேருக்கு தெரியும் இந்த நிலையில் தனது அக்காவுடன் சிறுவயதில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தற்பொழுது வெளியிட்டுள்ளார் இந்த புகைப்படம் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.

rakshan
rakshan

Leave a Comment