சந்தியாவை மிரட்டும் செல்வம்.! திசை திரும்பும் சீரியல் பரபரப்பாகும் எபிசொட்

விஜய் டிவியில் மிகவும் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் தான் ராஜா ராணி 2. இந்த சீரியல் அறிமுகமான சில கால கட்டத்திலேயே ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து தற்போது டிஆர்பி-யில் உச்சத்தில் இருந்து வருகிறது. அதோடு மட்டுமல்லாமல் தொடர்ந்து மிகவும் பல சுவாரஸ்யங்களுடன் ஓடிக்கொண்டிருக்கும் இந்த சீரியலில் கடந்த சில வாரங்களாக பார்வதியை கடத்தி வைத்துக்கொண்டு விக்கியின் அப்பா அதற்கு உதவி புரிந்த செல்வம் என அனைவரும் இணைந்து பெரிய ஒரு யுத்தத்தையே நடத்தி உள்ளார்கள்.

அதாவது பார்வதியை கடத்தி வைத்திருந்த நிலையில் சில வாரங்கள் கழித்து சமீபத்தில்தான் கண்டுபிடித்தார்கள் இப்படிப்பட்ட நிலையில் இவர்கள் இணைந்து சாமி கும்பிட்டுக் கொண்டு இருக்கும் பொழுது சர்க்கரையை காணவில்லை என சந்தியா கூற பிறகு சரவணனிடம் எனக்கு சர்க்கரையை எங்கு இருக்கிறான் கண்டுபிடித்து தாங்க என்று கூறுகிறாள்.

சரவணனும் சர்க்கரையை கண்டுபிடித்த நிலையில் அந்த சட்டையில் இருந்த பாமை சந்தியா கண்டுபிடித்து விடுகிறாள். பிறகு அதனைப் பிடுங்கிக் கொண்ட சரவணன் யாரும் இல்லாத இடத்திற்க்கு ஓடும் பொழுது பாம் வெடித்து விடுகிறது. பிறவி சரவணனுக்கு ஏதோ ஆகிவிட்டது என அனைவரும் கதற உடனே சரவணன் அதிலிருந்து உயிருடன் பிடித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது தான் அனைத்து பிரச்சனைகளும் சரியாகி உள்ள நிலையில் மீண்டும் பெரும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.  அதாவது ஜெயிலில் இருந்த செல்வம் தப்பித்த நிலையம் போலீசார்கள் சந்தியாவின் வீட்டிற்கு வந்து செல்வம் தப்பித்து விட்டான் கண்டிப்பாக உங்களை தான் வந்து தாக்குவான் என்று சத்யாவின் குடும்பத்திலுள்ளவர்களிடம் கூறிவிட்டு சென்றுவிடுகிறார்.

பிறகு இரவு நேரத்தில் சந்தியாவை பார்ப்பதற்காக செல்வம் வீட்டிற்குள் வருகிறார்.சந்தியாவிடம் அடுத்ததாக தென்காசியில் கொடூரமான கொலை நடக்கப் போகிறது அது நீதான் என்று கூறி மிரட்டுகிறான்.  மேலும் அர்ச்சனா உன்னால் தான் இவ்வளவு பிரச்சனையும் என சிவகாமியிடம் சந்தியாவை போட்டு கொடுக்கிறார்.இதுதான் இன்றைய எபிசோடு ஒளிபரப்பாக இருக்கிறது.

Leave a Comment