தாலி கட்டும் நேரத்தில் அதிரடியான முடிவை எடுத்த பார்வதியின் மாமியார்.! இனிவரும் எபிசோடு.

raja rani 13
raja rani 13

விஜய் தொலைக்காட்சியில் ப்ரைம் டைமில் ஒளிபரப்பப்படும் நாடகமான ராஜாராணி சீசன் 2 மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் கடந்த சில வாரங்களாக மிகவும் விறுவிறுப்பாகவும் எதிர்பார்ப்புடனும் கதைத்தொடர் அமைந்து மக்களை தன் பக்கம் இழுத்து வந்தது.

ஏனென்றால் கடந்த சில வாரங்களாக இந்த நாடகத்தில் நடிக்கும் பார்வதி கதாபாத்திரம் சந்திக்கக்கூடாது கஷ்டங்களை எல்லாம் சந்தித்து மிகவும் பயத்துடன் இருந்த வந்தார்.ஏனென்றால் விக்கி என்பவன் பார்வதியை பிளாக்மெயில் செய்து வந்தான், ஆனால் ஒரு போதும் அவனுக்கு இறங்கி செல்லாத பார்வதி தினமும் அழுது கொண்டே இருப்பார்.

இதனால் கடுப்பான விக்கி “உனது கல்யாணம் நடக்கும் தருணத்தில் நான் உன் மானத்தை வாங்கி விடுவேன்” என்று கூறியிருந்தான். சரி இப்படியெல்லாம் கூறுகிறார்களே கதையில் ஏதாவது நன்றாக சம்பவம் நடக்குமோ என்று எதிர்பார்ப்புடன் இருந்தார்கள் ரசிகர்கள்.

இந்நிலையில்தான் தற்போது வெளியான புரோமோவில், பார்வதிக்கு தாலி கட்டுவதற்கு முன்பு விக்கி சென்று கல்யாணத்தை நிறுத்த முயற்சிக்கிறான் ஆனால் அங்கு பார்வதியின் மாமியார் அதெல்லாம் எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை நான் மனப்பூர்வமாக என்னுடைய மருமகளை ஏற்றுக்கொள்கிறேன், எந்தவித சந்தேகமும் இன்றி என்று கூறுகிறார், இதைக் கேட்டதும் அங்கிருந்த அனைவரும் அதிர்ச்சியுடன் மகிழ்ச்சி அடைகின்றனர். இதைக் கேட்டவுடன் பார்வதியின் அம்மா, நான் வயசுலதான் பெரியவங்க ஆனா நீங்க குணத்திலே பெரியவங்க அப்படின்னு சொல்லிட்டாங்க.

அதுக்கப்புறம் பார்வதி விக்கி கிட்ட சொல்றாங்க அது என்னன்னா “வாழ முடியாதுன்னு சொன்னில எப்படி வாழ்ந்து காட்டுவன்னு பாரு” அப்படின்னு சொல்றாங்க, அதுக்கப்புறம் கொஞ்சம் ரொமான்ஸ் எல்லாம் பண்ற மாதிரி மாப்பிள்ளை தாலி கட்டும்பொழுது ஐ லவ் யூ னு சொல்றாரு இவங்களும் ஐ லவ் யூன்னு சொல்றாங்க, இன்னும் கொஞ்சம் மேல போயி மாப்பிள்ளை பார்வதியோட கன்னத்துல கிஸ் பண்றாரு இதை பார்த்த விக்கி செம்மையா கடுப்பாகி மண்டபம் மேடைக்கு ஓட பாக்குறான் ஆனா போலீஸ் அவனை பிடித்துவிடுகிறார்கள். இத்துடன் புரோமோவும் முடிவடைந்தது.