பார்வதியை கடத்திய விக்கியின் அப்பா.! இனி நடக்கப்போவது என்ன.? இன்றைய எபிசோட்.

0

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி சீரியலுக்கு பெரிதளவிலான ஆதரவு கிடைத்தது. இந்த சீரியலில் குடும்பத்தை பற்றி காட்டினாலும் ஒரு பெண் இப்படித்தான் இருக்கவேண்டும் என்பதை முழுமையாக காட்டியதால் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த சீரியலாக வளர்ந்து வந்தன. எல்லா பெண்களும் சந்தியா போல் வாழ வேண்டும் வாழ்க்கையில் எதையும் சாதிக்க வேண்டும் என்பதை இயக்குனர் அருமையாக காட்டி வந்தார்.

தற்பொழுது சீரியலில் பல ட்விஸ்டுகள் ஓடிக்கொண்டிருக்கிறது. இதில் கடந்த வாரத்தில் பார்வதிக்கு திருமணம் நடத்தி வந்தார்கள்.அதில் ஏகப்பட்ட பிரச்சினைகள் ஏற்பட்டது. அதையெல்லாம் ஒரு பெண்ணாக இருக்கும் சந்தியா அனைத்தையும் சுக்குநூறாக உடைத்து பிரச்சினையை தீர்த்தார். இந்தப் பிரச்சினை அனைத்தையும் தீர்த்து வைத்ததால் எல்லோருக்கும் சந்தியா மேல் ஒரு அசைக்க முடியாத நம்பிக்கை வந்தது.

இதனைத் தொடர்ந்து பார்வதி புகுந்த வீட்டில் சந்தோஷமாக இருக்கிறார். பார்வதியால் ஜெயிலுக்கு போன விக்கி, இதனால் விக்கியின் அப்பா கோபத்தின் உச்சகட்ட நிலையில் இருக்கிறார். அதைத்தொடர்ந்து ஒரு வில்லனை சரவணனின் பேக்கரிக்கு வேலைக்காரனாக அனுப்பி பார்வதியை கடத்திக்கொண்டு வருவதாக பணத்தைக் கொடுத்து அனுப்பியுள்ளார்.

இந்நிலையில் அந்த வில்லனும் சரவணனின் பேக்கரியில் வேலை செய்வது போல் நடித்து வருகிறார். பார்வதியும் பாஸ்கரும் கல்யாணமாகி மறு வீட்டிற்கு செல்ல இருப்பதை நினைத்து சந்தோசமாக செல்கிறார்கள். கோவிலுக்கு சென்று போகலாம் என்று பாஸ்கர் கூறுகிறார்.சேர்ந்து கோயிலுக்குச் சென்று வருகிறார்கள்.சிறிது நேரத்திலேயே வீட்டிற்கு சென்று விட்டார்கள். பாஸ்கரையும் பார்வதியையும் பார்த்துவிட்டு குடும்பமே சந்தோஷத்தில் இருக்கிறார்கள்.

இதனைத்தொடர்ந்து பேக்கரியில் ஒரு ஓரமாக பார்வதியை கடத்துவதாக போன் பேசியதை பார்வதி கேட்டு விடுகிறார்.அதை கேட்டதும் பார்வதி சரவணனிடம் சொல்ல போகிறேன். என்று போகும்போதே பார்வதியை அடித்துவிட்டு வாயில் துணியைக் கட்டி ஒரு ஓரமாக கட்டி வைக்கிறான்

இந்நிலையில் குடும்பத்தினர்கள் அனைவரும் பார்வதியை கண்டுபிடித்து விடுவார்களா? என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வருகிறார்கள். பார்வதியை திட்டமிட்டு கடத்திய விக்கியில் அப்பாவும் ஜெயிலுக்கு அனுப்புவதற்கு சந்தியாவுக்கு வேலை வந்துவிட்டது. இனி சந்தியாவின் ஆட்டம் பயங்கரமாக இருக்கும். என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்க்கப்படுகிறது.