நல்லவன் வேஷம் போட்டு மாமனாரிடம் பணம் பிடுங்கும் ஆதி.! கண் கலங்கும் சந்தியா..

0
raja-rani-2
raja-rani-2

விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வரும் நிலையில் தற்பொழுது மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் ராஜா ராணி 2. இந்த சீரியலில் எப்படியாவது போலீசாகி விட வேண்டும் என்பதற்காக சந்தியா பல முயற்சிகளை செய்து வருகிறார் மேலும் அவர் தொடர்ந்து கோச்சிடம் திட்டு வாங்குவதையும் வழக்கமாக வைத்திருக்கிறார்.

இப்படிப்பட்ட நிலையில் தற்போது சைக்கிளிங் போட்டி நடைபெற்ற வருகிறது இதில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக சந்தியா ஆர்வமாக இருந்து வருகிறார் மேலும் சரவணனும் இது மிகவும் கடுமையான போட்டி நல்லபடியாக விளையாடுங்கள் என கூறுகிறார். இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது ஜெசி கர்ப்பமாக இருந்து வரும் நிலையில் அவருக்கான மருத்துவ செலவு அதிகரிக்கிறது.

எனவே ஆதி இதற்காகத்தான் திருமணம் வேண்டாம் எனக் கூறினேன் உன்னால் தான் இவ்வளவு பிரச்சனையும் என மருத்துவமனையில் திட்டி வந்த நிலையில் இரவு நேரத்தில் தன்னுடைய பிரண்டை பார்க்க வந்ததாக கூறிவிட்டு தன்னுடைய மாமனார் வீட்டிற்கு செல்கிறார் அவருடைய மாமனார், மாமியார் இருவரும் ஆதியை வீட்டிற்குள் அழைத்து ஜூஸ் குடிக்கிறார்கள்.

பிறகு ஜெசி நல்லா இருப்பதாகவும் சிவகாமியும் நல்லபடியாக பார்த்துக் கொண்டிருப்பதாகவும் ஆதி கூறுகிறார். பிறகு ஜெசியின் அம்மா ஏதாவது பண உதவி வேண்டும் என்றால் கண்டிப்பாக சொல்லவேண்டும் என கூற ஆதி பணம் இல்லாதது போல் நடிக்கிறான். பிறகு அவர்கள் மருத்துவ செலவிற்காக பணம் தருகிறார்கள் வேண்டாம் வேண்டாம் என நல்லவன் போல் நடிக்க பிறகு அவர்கள் வச்சுக்கோங்க மாப்பிள்ளை என பணத்தை தருகிறார்கள்.

மேலும் ஜெசியிடம் இந்த விஷயத்தை சொல்லக்கூடாது எனவும் கூறிவிட்டார் பிறகு வீட்டிற்கு வந்து நல்லவன் போல் நடித்து வருகிறான் குடும்பத்தில் இருப்பவர்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து கொண்டு கண்டிப்பாக சந்தியா இந்த போட்டியில் ஜெயித்து விடுவதாக கூறுகிறார்கள் பிறகு சிவகாமி இந்த போட்டியில் சந்தியா முதல் மூன்று இடங்களில் பிடிக்க வேண்டும் அதுதான் எனக்கு சந்தோஷம் எனக் கூறுகிறார்.

இவரை தொடர்ந்து செந்தில் பாரத்திற்கு ஒருமுறை அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட வேண்டும் என கூறுகிறார். பிறகு சரவணன் சந்தியாவிற்காக கூடையில் நிறைய பழங்கள் அனுப்பி வைத்திருக்கிறார் இதனை சந்தியாவின் நண்பர்கள் அவரிடம் கொடுக்க பிறகு சரவணனுக்கு போன் பண்ணி என் அம்மா, அப்பா இருந்தா கூட இவ்வளவு நல்லா பார்த்திருப்பாங்களான்னு தெரியவில்லை என சொல்லிவிட்டு அழுகிறார் சரவணன் சமாதானப்படுத்துகிறார் இதோடு இன்றைய எபிசோடு நிறைவடைகிறது.