நடு ரோட்டில் சண்டை போட்டுக் கொள்ளும் ஆதி மற்றும் செந்தில்.! ஜெசியிடம் உண்மையை உடைத்த அர்ச்சனா..

0
raja-rani-2
raja-rani-2

விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி 2 சீரியலில் இன்று ஆதி, ஜெசி, சிவகாமி, ரவி மற்றும் சரவணன் ஆகியவர்கள் பியூட்டி பார்லர் கடைக்காக ஓனரை பார்த்து பேச சென்றுள்ளனர் மாதம் 15 ஆயிரம் ரூபாய் வாடகை அட்வான்ஸ் 3 லட்சம் ரூபாய் தர வேண்டும் என சொல்ல சரவணன் அட்வான்ஸ் அதிகமாக இருக்கிறது என குறைக்க சொல்கிறார்.

ஆனால் இதுவே கம்மிதான் என அவர் கூறிவிடுகிறார் பிறகு இந்த நேரத்தில் செந்தில் மற்றும் அர்ச்சனா என இருவரும் அவர்களது கடையை பெரிதாக்க வேண்டும் என்பதற்காக இந்த கடையை எடுக்க உள்ளனர் இவர்களை வெளியே உட்கார வைத்து உள்ளே ஒரு பார்ட்டி பேசிவிட்டு இருக்காங்க வெயிட் பண்ணுங்க என்ன சொல்ல வாடகை எவ்வளவு என்ன என விசாரிக்க வாடகை 15 ஆயிரம் ரூபாய் அட்வான்ஸ் 3 லட்சத்து இருபதாயிரம் என சொல்ல எங்களுக்கு ஓகே தான் என கூறிவிடுகின்றனர்.

இதனைத் தொடர்ந்து அதற்குள் ஆதி எங்களுக்கு கடைபிடிச்சிருக்கு ஓகே தான் என சொல்லி 50000 அட்வான்ஸ் கொடுத்து அக்ரீமெண்ட் போடுகிறார். வெளியே பியூன் நீங்க போயிட்டு இரண்டு நாள் கழிச்சு வாங்க என சொல்லி அனுப்பி கிளம்ப சொல்லுகிறார். அர்ச்சனா பால் பாட்டில் மறந்து வைத்து விட்டதாக சொல்லி திரும்ப வருகிறார்.

பிறகு அனைவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள பிறகு அர்ச்சனா இந்த கடை எங்களுக்கு தான் வேண்டும் என அடம்பிடிக்க ஜெசி எங்களுக்கு தான் வேணும் நாங்கள் அட்வான்ஸ் கொடுத்து இருக்கோம் என ஆரம்பிக்க ஆதி சென்றிருக்கிறாயே கைகலப்பு ஏற்படுகிறது.

பிறகு சிவகாமி இருவரையும் திட்டி வீட்டுக்கு அனுப்பி வைக்கிறார் இதோடு இன்றைய எபிசோடு நிறைவடைகிறது. இதனை பயன்படுத்திக் கொண்ட அர்ச்சனா ஜெசியிடம் ஆதி வீட்டில் ஐந்து லட்ச ரூபாய் பணம் திருடியதை போட்டு உடைக்கிறார் இதனால் மேலும் சண்டை ஏற்படுகிறது.