சந்தியாவை போலீசாக வர்ணித்து ஊர் முழுவதும் கட்டவுட் வைத்த பொதுமக்கள்.! சரவணனை சிவகாமியிடம் கோத்துவிட்ட அர்ச்சனா..

பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜாராணி 2 சீரியல் மிகவும் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. தொடர்ந்து சில வாரங்களாக மிகவும் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டே இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் இந்த சீரியலின் எதிர்பார்ப்பு அதிக அளவில் இருந்து வருகிறது. மேலும் முன்பை விடவும் தற்போது இந்த சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

பல போராட்டங்களுக்குப் பிறகு பார்வதியின் திருமணம் முடிந்த நிலையில் திருமணமான அடுத்த நாளே பார்வதியை விக்கியின் அப்பா கடத்த பல பிரச்சனைகளுக்கு பிறகு மீண்டும் தற்போது தான் அனைத்து ஆபத்தில் இருந்தும் சந்தியாவின் குடும்பத்தினர்கள் வெளியில் வந்துள்ளார்கள்.

அதாவது கடைசியாக சக்கர போட்டிருந்த ட்ரெஸ்ஸில் பாம் இருப்பதை சந்தியா அரிய உடனே சர்க்கரையை தேடி கண்டுபிடித்து விடுகின்றனர். பிறகு அந்த பாம்பை பிடிக்க கொண்டு சரவணன் ஆள் இல்லாத இடத்திற்கு தூக்கி போட வேண்டும் என்பதற்காக தனது உயிரை பணையம் வைத்து செல்கிறார்.

இவ்வாறு பாம் வெடித்து பிறகு சரவணனுக்கு ஏதோ ஆகிவிட்டது என அனைவரும் பதரே எந்த ஒரு ஆபத்தும் இல்லாமல் சரவணன் மீண்டும் வந்து விடுகிறார். உடனே போலீசார் அந்த இடத்திற்கு வந்து சந்தியா மற்றும் சரவணனை பாராட்டி விட்டு செல்கின்றனர்.

மேலும் சந்தியாவை நீ இங்க இருக்க வேண்டிய ஆளே இல்லமா எங்க டிபார்ட்மெண்டில் இருக்க வேண்டும் என்பதற்காக தொப்பியை அணிந்து கௌரவ படுத்துகின்றனர். உடனே சிவகாமி எங்களுக்கு இதெல்லாம் வேண்டாம் சந்தியா வீட்டில் நல்ல மருமகளாக இருந்தால் போதும் என்று கூறுகிறார்.

எனவே அனைவரும் சந்தியாவிற்கு பாராட்டு விழா நடத்த வேண்டும் என கூற சிவகாமி அதனை மறுத்து விட்டார். இப்படிப்பட்ட நிலையில் குடும்பத்தில் இருப்பவர்கள் அனைவரும் வெளியில் செல்லும்பொழுது சந்தியாவை போலீஸ் போல் வர்ணித்து ஏராளமான கட் அவுட்டுகள் வைக்கப்பட்டிருக்கிறது.

இதனைப் பார்த்த அனைவரும் பெருமைப்பட சிவகாமி மட்டும் கோபத்தில் இருந்து வருகிறார். மேலும் வில்லி அர்ச்சனா இவ்வாறு இப்படி கட்டவுட் வைப்பதற்கு முக்கிய காரணம் சரவணன் மாமா தான் என சரவணனையும் சந்தியாவையும் சேர்த்தே சிவகாமியிடம் கொடுத்து விடுகிறார் இதுதான் இன்றைய எபிசோட்டுல் நடக்க இருக்கிறது.

Leave a Comment