திடீரென தன்னுடைய திருமணத்தை நடத்திய ராஜா ராணி 2 சீரியல் பிரபலம்.! வாழ்த்துக்கள் கூறும்..

சமீப காலங்களாக இணையதளத்தில் கலக்கி வரும் ஜோடிகள் தான் மகாலட்சுமி மற்றும் ரவீந்தர். பிரபல தயாரிப்பாளரான ரவீந்தர் மற்றும் சீரியல் நடிகை மகாலட்சுமி இருவரும் சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார்கள் இவர்களுடைய திருமணம் மிகப்பெரிய ட்ரெண்டிங்காக சோசியல் மீடியாவில் இருந்து வருகிறது. மேலும் தற்பொழுது இணையதளத்தில் பேசும் பொருளாக இருந்து வருகிறார்கள்.

இப்படிப்பட்ட நிலையில் இவர்களை தொடர்ந்து சமீபத்தில் தற்பொழுது எதிர்பாராத வகையில் விஜய் டிவியின் பிரபலத்திற்கு திடீரென திருமணமாகி உள்ளது. அந்த வகையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த நடிகர் புகழுக்கு அவருடைய காதலை பென்சியுடன் சமீபத்தில் திருமணம் நடைபெற்று முடிந்தது இதனை தொடர்ந்து சமீபத்தில் விஜய் டிவியில் முக்கிய சீரியல்களில் ஒன்றாக ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி 2 தொடரில் நடித்து வரும் பிரபலத்திற்கு திடீரென திருமணமாகி உள்ளது.

அதாவது ராஜா ராணி சீரியல் நடித்து வரும் அனைத்து கதாபாத்திரங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. மேலும் சமீப காலங்களாக இந்த சீரியல் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் திடீரென இந்த சீரியலில் நடித்து வந்த விஜே அர்ச்சனா சில காரணங்களினால் விலகினார் மேலும் விஜே அர்ச்சனா மற்றும் பாரதி கண்ணம்மா சீரியல் பாரதி அருணுக்கம் விரைவில் திருமணம் நடக்க இருப்பதாக கூறப்படுகிறது.

raja rani 2
raja rani 2

இப்படிப்பட்ட நிலையில் ராஜா ராணி 2 சீரியலில் அர்ச்சனாவின் கணவர் கதாபாத்திரத்தில் செந்தில் என்ற கேரக்டரில் நடித்து வந்தவர் தான் பாலாஜி தியாகராஜன்.இந்த சீரியலில் அர்ச்சனா மற்றும் செந்தில் இருவரும் அடிக்கடி சண்டை போட்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார்கள் மேலும் பாலாஜி தியாகராஜ் ஷார்ட் பிலிம் யூடிப்,வெப் சீரியல் போன்றவற்றிலும் நடித்துள்ளார்.

raja rani 1
raja rani 1

இப்படிப்பட்ட நிலையில் பாலாஜிக்கு திடீரென திருமணம் நடைபெற்று உள்ளது இப்படிப்பட்ட நிலையில் இவர்களுடைய திருமண புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாக அனைவரும் இவர்களுக்கு வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.

Leave a Comment