சந்தியாவை தலையில் அடித்து விட்டு கண்ணம்மா மற்றும் பார்வதியை கடத்திய ரவுடி கும்பல்.! பார்வதியை உயிருடன் பெட்ரோல் ஊற்றி கொளுத்திய செல்வம்.. விறுவிறுப்பான எபிசோடுகளுடன் ராஜா ராணி 2

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய சீரியல்களான ராஜா ராணி 2 மற்றும் பாரதி கண்ணம்மா இரண்டு சீரியல்களையும் இணைத்து மகாசங்கமாக ஒளிபரப்பி வருகிறார்கள் ஏனென்றால் பாரதி கண்ணம்மா சீரியல்  டிஆர்பி மிகவும் அடிவாங்கி வந்ததால் மீண்டும் எகிற வேண்டும் என்பதற்காக இரண்டு சீரியலையும் ஒளிபரப்பி வருகிறார்கள்.

இந்த சீரியலில் சாமியார் எப்படியாவது சிவகாமியின் குடும்பத்தை பழிவாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் பல திட்டங்களை போட்டு வருகிறார். அந்த வகையில் கண்ணம்மா மற்றும் சந்தியா இருவரும் இணைந்து சாமி சிலையை அலங்கரித்த நிலையில் சாமியை திறக்கும் பொழுது சாமியின் கழுத்தில் இருந்த நகைகள் காணாமல் போய்விடுகிறது.

எனவே இதற்கெல்லாம் காரணம் சிவகாமியின் குடும்பத்தினர் காலம் தான் என சாமியார் கூற பிறகு ஊரில் இருப்பவர்கள் அவர்களின் மீது கோபத்தில் இருந்து வருகிறார்கள். பிறகு ஹேமா மற்றும் லட்சுமிக்கு சுடுதண்ணி போடுவதற்காக வரட்டி மூலம் அடுப்பை பத்தடிக்கிறார்கள் அந்த வறட்டியில் அர்ச்சனா ஒளிய வைத்திருந்த சாமி நகைகள் இருப்பதை கண்டுபிடித்து விடுகிறார்கள்.

இப்படிப்பட்ட நிலையில் பார்வதி தனது குடும்பத்தில் இருக்கும் பிரச்சனையை சரி செய்வதற்காக சாமியாரை சந்திப்பதற்காக சொல்கிறார் அங்கு அந்த சாமியார் தவறாக நடந்து கொள்ள அவரை அறைந்து விடுகிறார். பிறகு இதனைப் பற்றி சந்தியா மற்றும் கண்ணம்மாவிடம் கூற அவர்கள் சாமியாரை மாட்டி விட வேண்டும் என முடிவு செய்கிறார்கள்.

இந்த நேரத்தில் கோபத்தில் இருந்து வந்த சாமியார் சிவகாமியின் குடும்பத்தில் இருக்கும் மூன்று பெண்கள் தீச்சட்டி இயந்த வேண்டும் என கூற பொதுமக்கள் அனைவரும் ஒன்றிணைந்து சிவகாமியின் வீட்டிற்கு சென்று விரட்டுகிறார்கள். பிறகு சந்தியா, கண்ணம்மா மற்றும் பார்வதி மூவரும் இணைந்து தீச்சட்டி ஏந்துகிறார்கள்.

ஊரை சுற்றி வரும் நேரத்தில் ரவுடி கும்பல் சந்தியாவை தலையில் அடித்து விட்டு கண்ணம்மா மற்றும் பார்வதியை கடத்தி செல்கிறார்கள். அங்கு அந்த செல்வம் வர பார்வதியை பெட்ரோல் ஊற்றி எரித்து விடுகிறார். பிறகு ஒரு பாக்ஸில் பார்வதி போட்டிருந்த நகைகளை போட்டு சிவகாமியின் வீட்டிற்கு அனுப்பி வைக்கிறார்கள் அங்கு பார்வதியின் கணவர் இது நான் பார்வதிக்கு வாங்கி தந்த மோதிரம் எனக் கூறிய அழுகிறார்.

அடுத்த நாள் போலீசார்கள் எரிந்த பிணம் ஒன்று இங்கு இருக்கிறது எனக் கூற அனைவரும் பதறி அடித்தார்கள் போக இது பார்வதி தான் என உறுதி செய்து பார்வதியின் கணவர் மற்றும் சரவணன் என குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவரும் அழுகிறார்கள். இவ்வாறு மிகவும் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் அடுத்தது கண்ணம்மாவின் நிலைமை என்ன என்ற இதற்கு மேல் தான் தெரிய வரும்.

Leave a Comment