விஜய் தொலைக்காட்சியில் பணியாற்றி வரும் பலரும் பிரபலம் ஆகி விடுகிறார்கள். அதிலும் தொகுப்பாளினி என்று சொன்னால் சொல்லவே வேண்டாம் அவர்கள் விரைவில் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து விஜய் தொலைக்காட்சியின் உச்சத்தில் இருக்கிறார்கள். விஜய் தொலைக்காட்சியின் செல்லப்பிள்ளை என அன்போடு அழைக்கப்படுபவர் டிடி என்கின்ற திவ்யதர்ஷினி.
இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிக்கு பல ரசிகர்கள் அடிமை என்றே கூறலாம். தற்போது விஜய் தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருபவர் பிரியங்கா இவர் தற்பொழுது பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டுள்ளார். பிரியங்காவின் துரு தூர பேச்சால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
இந்த நிலையை விஜய் தொலைக்காட்சியில் சில வருடங்களுக்கு முன்பு பிரியங்கா ஒல்லி பெல்லி என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார் ஈரோடு மகேஷ் அவர்களுடன் இணைந்து தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சியின் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.
இந்த நிகழ்ச்சியின் புகைப்படத்தை பார்த்தால் இந்த நிகழ்ச்சியின் டைட்டிலுக்கு ஏற்றவாறு ஒல்லி பெல்லி ஆக பிரியங்கா இருக்கிறார் இதனை பார்த்த ரசிகர்கள் அட நம்ம பிரியங்காவா இவ்வளவு ஒல்லியாக இருப்பது என ரசிகர்கள் ஆச்சரியத்துடன் புகைப்படத்தை பார்த்து கமெண்ட் செய்து வருகிறார்கள்.

தற்பொழுது பிக் பாஸ் வீட்டில் பிரியங்கா இருப்பதால் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை மைனா நந்தினி மாகா பா உடன் இணைந்து தொகுத்து வழங்கி வருகிறார் பிக்பாஸ் நிகழ்ச்சி பிறகு பிரியங்கா விஜய் தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
