தன்னுடைய குடும்பத்தினர்களுடன் இணைந்த கதிர், முல்லை.! ஆச்சரியப்பட்ட குடும்பத்தினர்கள்..

0
pandiyan-stores
pandiyan-stores

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியல்களில் ஒன்றான பாண்டியன் ஸ்டோர் சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. மேலும் கூட்டு குடும்பத்தை மையமாக வைத்து வரும் இந்த சீரியலில் தொடர்ந்து ஏராளமான திருப்பங்கள் இருந்து வரும் நிலையில் 5 லட்ச ரூபாய் பணத்தை கொடுத்து விட்டு நான் இந்த வீட்டிற்குள் வருவேன் என தன்னுடைய குடும்பத்தை விட்டு பிரிந்து தனியாக வாடகை வீட்டில் முல்லையுடன் வாழ்ந்து வந்தார்.

எனவே அந்த ஐந்து லட்சம் ரூபாய் கடனையடைக்க வேண்டும் என்பதற்காக ஹோட்டல் உள்ளிட்ட ஏராளமான முயற்சிகள் செய்த நிலையில் எதுவும் வெற்றியை தரவில்லை இப்படிப்பட்ட நிலையில் நியூஸ் பேப்பர் ஒன்றில் சமையல் போட்டியில் ஜெயித்தால் 10 லட்சம் தருவதாக அட்வர்டைஸ்மென்ட் ஒன்றை பார்த்த நிலையில் அதற்கு தன்னுடைய பெயரை அனுப்பி வைத்திருந்தார்.

இவர்களுக்கு கலந்து கொள்வதற்கான வாய்ப்பு கிடைத்த நிலையில் இவர்கள் இருவரும் அந்த போட்டியில் கலந்து கொண்டார்கள் தொடர்ந்து இவர்கள் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றதால் சக போட்டியாளர்களுக்கு அது பிடிக்கவில்லை எனவே கதிர் முல்லையை ஜெயிக்க விடக்கூடாது என்பதற்காக பல முயற்சிகளை செய்து வந்தார்கள் சண்டை போட்டு வந்த நிலையில் கத்தியால் குத்தும் நேரத்தில் மூர்த்தி மற்றும் ஜீவா இருவரும் வந்து கதிரை காப்பாற்றி விடுகிறார்.

பிறகு தன்னுடைய அண்ணன்களின் துணையுடன் கதிர் போட்டியில் பங்கு பெற்ற பத்து லட்ச ரூபாய் பணத்தை வெற்றி பெற்று விடுகிறார் இப்படிப்பட்ட நிலையில் ஊருக்கு கிளம்பும் நேரத்தில் கதிர் தன்னுடைய மனதிற்குள்ளேயே என்னை வீட்டுக்கு கூப்பிடுங்க அண்ண எனக் கூற உடனே மூர்த்தி நீ இல்லாமல் வீடு மகிழ்ச்சியாக இல்லை எனவே வீட்டிற்கு வா எனக் கூற உடனே கதிர் முல்லை இருவரும் மகிழ்ச்சி அடைகிறார்கள்.

இருவரும் வீட்டிற்கு வர தனம் ஆரத்தி எடுத்து உள்ளே அழைத்து செல்கிறார் வீட்டிற்குள் சென்றவுடன் கதிர் தான் ஜெயித்த 10 லட்சம் ரூபாய் பணத்தை கொடுத்து இந்தாங் அண்ணி நான் ஜெயிச்ச பணம் என தர அனைவரும் ஆச்சரியப்படுகிறார்கள் இதோடு இன்றைய எபிசோடு நிறைவடைகிறது.