ராதிகா மற்றும் கோபி ஒன்றாக பேசிக் கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த மீனா.!

0

தற்போதெல்லாம் இரண்டு முக்கிய சீரியல்கள் இணைத்து மகா சங்கமம் என்ற பெயரில் ஒளிபரப்பி வருகிறார்கள். அந்த வகையில் விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியர்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வரும் நிலையில் தற்போது டிஆர்பி-யில் முன்னணி வகித்து வரும் பாக்கியலட்சுமி மற்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் இரண்டு சீரியல்களையும் ஒன்றிணைத்து ஒரு மணி நேர ஸ்பெஷலாக மகா சங்கமமாக ஒளிபரப்பி வருகிறார்கள்.

அந்தவகையில் கோபியை பாண்டியன் ஸ்டோர் குடும்பத்தினர்கள் படாதபாடு படுத்தி வருகிறார்கள். கோபியின் அப்பாவிற்கு பிறந்தநாள் வருவதால் ராதிகா மற்றும் தனம் இருவரும் இணைந்தே ராதிகா வைத்ததற்காக சென்றனர். அப்பொழுது பாக்கியா ராதிகாவிடம் கண்டிப்பாக பிறந்தநாள் விழாவிற்கு உங்களின் வருங்கால கணவரை அழைத்து வர வேண்டும் என்று கூறுகிறார்.

இப்படிப்பட்ட நிலையில் தற்போது கோபி எப்படியாவது பாக்கியை விவாகரத்து செய்துவிட்டு ராதிகாவை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என பல திட்டங்களை செய்து வருகிறான். ஆனால் ராதிகாவிற்கு கோபியின் மனைவி பாக்கியா என்பது தெரியாது. தன் கணவன் சொல்வது அனைத்தும் உண்மை என்று நம்பி பாக்கியா கண்ணும் கருத்துமாக பார்த்து வருகிறாள்.

அடிக்கடி பாகியாவிடம் மாற்றுவது போல் வந்தாலும் கோபி எப்படியாவது சமாளித்து விடுகிறான். எப்பொழுது கோபி பாக்கியாவிடம் மாட்டுவான் என்று ரசிகர்கள் மிகவும் ஆவலாக பார்த்து வருகிறார்கள். சமீபகாலங்களாக டீச்சர் பெயரை கேட்டால் மட்டும் ஏன் கோபி பண்றீங்க  என்று கேட்டு வருகிறார் ராதிகா.

இப்படிப்பட்ட நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர்கள் கோபியை ஏற்கனவே பல கேள்விகள் கேட்டு வரும் நிலையில் தற்போது மீனா கோபி மற்றும் ராதிகா இருவரும் ஒன்றாக அமர்ந்து பேசிக் கண்டே இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைகிறாள்.