கதிரை போலீஸ் ஸ்டேஷனில் இருந்து வீட்டிற்கு அழைத்து வந்த அண்ணன்கள்.! கொடுத்த பணத்தைக் கேட்டு சித்திரவதை செய்யும் சித்தி.. என்ன செய்வதென்று தெரியாமல் தவிக்கும் ஐஸ்வர்யா, கண்ணன்

pandiyan-stores-34
pandiyan-stores-34

விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துவரும் நிலையில் தொடர்ந்து பல திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் கண்ணன் ஐஸ்வர்யா செய்த தவறினால் போலீசார் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டிருக்கிறார் கதிர்.

எனவே கதிரை இப்படி கைது செய்து விட்டார்களே என்ற குடும்பத்தில் அனைவரும் இருந்து வருகிறார்கள் எனவே இதன் காரணமாக ஐஸ்வர்யா கண்ணனை தொடர்ந்து திட்டி தீர்த்து வருகின்றனர். அப்படி வளைய காப்பு நிகழ்ச்சி மிகவும் பிரம்மாண்டமாக நடத்த தயார் செய்திருந்த நிலையில் அதற்கான தேவையான பணத்தை ஐஸ்வர்யாவின் சித்தி கடனாக வாங்கி கொடுத்திருந்தார்.

எனவே அந்த பணத்தை கொடுக்க வேண்டும் என ஐஸ்வர்யாவை தொந்தரவு செய்து வருகிறார். இதனை அடுத்து மூர்த்தி, ஜீவா, முல்லை என அனைவரும் ஐஸ்வர்யா கண்ணன் மீது மிகுந்த கோபத்தில் இருந்து வருகிறார்கள். மேலும் எப்படியாவது கதிரை வெளியில் எடுத்து வர வேண்டும் என முயற்சி செய்து வரும் நிலையில் தற்போது அந்த ஆபீசர்களிடம் பேசி அவர்களுக்கு 5 லட்சம் ரூபாய் பணத்தை கொடுத்துவிட்டு கேஸ்சை வாபஸ் வாங்க செய்துள்ளனர்.

அதன் பிறகு கதிரை ரிலீஸ் செய்து வீட்டிற்கு அழைத்து வருகின்றனர். எனவே இதன் காரணமாக ஐஸ்வர்யா மிகவும் பிரம்மாண்டமாக நடக்க வேண்டுமென்று நினைத்த வளைய காப்பு நிகழ்ச்சி நடக்காமல் பாதியிலேயே நின்று விட்டது அதற்கான வாங்கிய கடனும் வீணாகி இருக்கும் நிலையில் இதனை அடுத்து இவர்கள் என்ன செய்யப் போகிறார்கள் என்பதனை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இவ்வாறு இது நாடகமாக இருந்தாலும் நிஜ வாழ்க்கையில் பலருடைய வாழ்க்கையில் நடந்த விஷயங்களை வைத்து மக்களுக்கு நல்ல கருத்துக்களை கூறும் வகையி ஐஸ்வர்யா கண்ணன் கதாபாத்திரத்தின் மூலம் வெளிப்படுத்தியுள்ளனர். இவ்வாறு இதற்கு மேலாவது ஐஸ்வர்யா, கண்ணன் ஒழுங்காக இருப்பார்களா என்பதனை பார்க்கலாம்.