கண்ணனை அவமானப் படுத்தியதால் ஐஸ்வர்யா எடுத்த அதிரடி முடிவு.! மொளச்சி மூணு இலை விடல உனக்கு அவ்வளவு திமிரா.? பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் இன்றைய எபிசோட்..

0
pandiyan-stores
pandiyan-stores

விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியல்களில் ஒன்றுதான் பாண்டியன் ஸ்டோர்ஸ் இந்த சீரியலில் தொடர்ந்து பல திருப்பங்கள் இருந்து வரும் நிலையில் நான்கு அண்ணன் தம்பிகளின் பாச உறவினை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வந்ததால் குடும்ப இளவரசிகள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வந்தது.

இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பமே சுக்கு நூறாக உடைந்து இருக்கும் நிலையில் அது குறித்த எபிசோடுகள் தான் சமீப காலங்களாக வெளியாகி வருகிறது. அதாவது மூர்த்திக்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் மளிகை கடையில் நல்ல லாபம் கிடைத்தாலும் தங்களுடைய கடந்த காலத்தில் நடந்த கஷ்டங்களை மனதில் வைத்துக் கொண்டு பெரிதாக செலவு செய்தாமல் இருந்து வருகிறார்.

இந்நிலையில் கதிர் பாண்டியன் ஸ்டோர்ஸ் ஹோட்டலில் கிடைக்கும் லாபத்தை வைத்து செலவுகளை பார்த்துக் கொள்கிறார். அதேபோல் கண்ணனும் தான் சம்பாதிக்கும் சம்பளத்தின் பாதியை எடுத்துக் கொண்டு மீதியை வீட்டிற்கு தருகிறார் இப்படி இருந்து வரும் நிலையில் ஜீவா மட்டும் செலவுக்கு பணம் இல்லாமல் தவித்து வருகிறார்.

எனவே இதனால் மனக்கஷ்டத்தில் ஜீவா இருந்து வரும் நிலையில் மீனாவின் தங்கை கல்யாணத்திற்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் இருப்பவர்கள் அனைவரும் மொய் போடுகிறார்கள் ஆனால் ஜீவா பெயரில் எந்த ஒரு மொய்யும் வராத காரணத்தினால் கோபமடைந்த ஜகார்த்தனன் இதனைப் பற்றி மீனா, ஜீவாவிடம் கூறுகிறார்.

எனவே ஜீவா கோபமடைந்து இதற்கு மேல் அந்த வீட்டிற்கு என்னால் வர முடியாது நான் உங்களுடைய தம்பி இல்லை இவர்கள் இருவரும் தான் உங்களுடைய தம்பி உங்களுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை முதலில் இங்கிருந்து கிளம்புங்கள் என கூற அதற்கு மூர்த்தி கதிர்-கண்ணன் இருவரும் தனித்தனியாக மொய் போட்டதை பற்றி தெரிந்து கொள்கிறார்.

எனவே வேலைக்கு போய் ஒரு மாசம் கூட ஆகல அதுக்குள்ள தனியா மொய் போட ஆரம்பிச்சிட்டியா என அனைவர் முன்பும் பளார் என அறைய கண்ணன் அழுகிறார். எனவே இதனை ஐஸ்வர்யாவால் தாங்கிக் கொள்ள முடியாத காரணத்தினால் கண்ணனை அழைத்துக் கொண்டு வெளியில் செல்கிறார் இவ்வாறு தற்பொழுது கண்ணனும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினை விட்டு பிரிந்துள்ளார்.