பணத்தைக் கேட்டு வீட்டிற்கு வந்த சித்தி.! திருந்தாமல் மூர்த்தி பாத்ரூம் போவதை வீடியோ எடுத்த ஐஸ்வர்யா.. கடுப்பில் குடும்பம்

pandiyan-stores
pandiyan-stores

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் தொடர்ந்து ஏராளமான திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது. இன்றைய எபிசோடில் மூர்த்தி தனத்திடம் அந்த புள்ள என்னா எல்லாத்தையும் வீடியோ எடுத்து போட்டுகிட்டு இருக்கு இந்த வேலை எல்லாம் வேணாம்னு சொல்லிடு வேப்பமரம்னு குன்னக்குடி காரங்களுக்கு தெரியாதா எனக் கேட்க தானம் இல்ல மாமா உலகம் முழுவதும் இந்த வீடியோவை பார்ப்பாங்க எனக் கூற உடனே மூர்த்தி அச்சச்சோ நான் பாத்ரூம் போன வீடியோவை எடுத்துச்சு அதையும் எல்லாரும் பார்ப்பாங்களா என கூற அதற்கு தானம் சிரிக்கிறார்.

இவ்வாறு போய்க் கொண்டிருக்கும் நிலையில் பிறகு ஐஸ்வர்யா என்ன வீடியோ போடலாம் என யோசித்துக் கொண்டு நடந்து கொண்டிருக்கும் நேரத்தில் முல்லை வந்து ஏன் உனக்கு இந்த தேவையில்லாத வேலை நீ வீடியோ எடுக்கக்கூடாது என மாமா சொன்னாங்களே நீ சொல்றதையே கேட்க மாட்டியா இந்த வீடியோ எடுத்து என்ன பண்ண போற என கேட்க அதற்கு நான் ரொம்ப பேமஸ் ஆக வேண்டும் என ஐஸ்வர்யா கூறுகிறார்.

இவ்வாறு முல்லை எப்பொழுதும் திட்டிக் கொண்டிருக்க ஐஸ்வர்யா ஏன் என்னை இப்படி திட்டறீங்க என கேட்கிறார் அதற்கு முல்லை ஏன் நீ பண்ற காரியத்துக்கு போஸ்டர் அடிச்சு ஒட்டணுமா என கேட்க அதற்கு ஐஸ்வர்யா நீங்க ஓட்ட வேண்டாம் இன்னும் கொஞ்ச நாளில் ஊரில் இருப்பவர்களே எனக்கு போஸ்டர் அடித்து ஒட்டுவார்கள் என கூறுகிறார்.

மறுபுறம் மீனா தனது மகள் ரைம்ஸ் சொல்ல சொல்லி திட்டி வரும் நிலையில் இந்த நேரத்தில் ஜகார்த்தனன் குழந்தையை தூக்கி வைத்துக் கொண்டு ரைம்ஸ் சொல்லுமாறு கேட்டுக் கொண்டிருக்கிறார். அதற்கு வாயை திறக்காத காரணத்தினால் மீனா திட்டுகிறார் ரைம்ஸ் தான சொல்லிடுவா என கூறி அனைவரும் மீனாவை சண்டை போடுகிறார்கள்.

இவ்வாறு ரைம்ஸ் சொல்லவில்லை என்றால் அவள் மேல தப்பு கிடையாது அவங்க டீச்சருக்கு சொல்லி தரேன் தெரியல என கூறுகிறார். இவ்வாறு இதற்கு தான் இனிமேல் இங்கு படிக்க வைக்க கூடாது வெளியூரில் படிக்க வைக்க வேண்டும் என கூற அதற்கு ஜீவா ஸ்கூல் இங்கே படிக்கட்டும் காலேஜ் போய் வெளில சேர்த்துக்கலாம் என கூற அதற்கு ஜகார்த்தனன் நான்தான் உங்களை திருச்சியில் செட்டில் பண்ணி விடுவதாக கூறியிருந்தேனே என சொல்ல அதற்கு அனைவரும் அதிர்ச்சடைகிறார்கள்.

ஜீவா அது எல்லாம் ஒன்றும் வேண்டாம் மாமா எல்கேஜி படிக்கணும் என்பதற்காக திருச்சி போய் தங்குவதெல்லாம் வேண்டாம் அவை இங்கே படிக்கட்டும். இதெல்லாம் யாராச்சும் கேட்டா சிரிப்பாங்க இத பத்தி நாம அதிகமா பேசியாச்சு அதெல்லாம் முடியாது இனிமே இத பத்தி பேச வேண்டாம் எனக் கூற பிறகு ரகுபதியை பார்ப்பதற்காக கிளம்புகிறார்கள்.

இதனை அடுத்து தனம், மூர்த்தி பேசிக் கொண்டிருக்கும் நேரத்தில் ஐஸ்வர்யாவின் சித்தி வீட்டிற்கு வர பேசிக் கொண்டிருக்கிறார்கள். பிறகு கண்ணனையும் ஐஸ்வர்யாவையும் கூப்பிட வீட்டில் இருப்பவர்களிடம் பணம் வாங்கியதை சொல்லிவிடுவார்களோ என பயத்தில் சைகையின் மூலம் சொல்லிவிடாதீர்கள் என கண்ணன் கூறுகிறார்.

எனவே இதன் காரணமாக ஐஸ்வர்யா சித்தியும் இதனை பற்றி யாரிடமும் கூறாமல் இருந்து வரும் நிலையில் பேசிக்கொண்டிருக்கும் பொழுதே ஐஸ்வர்யா அவரை கையைப் பிடித்து ரூம் மேற்கொள் அழைத்து வருகிறார். எதற்கு இங்கு வந்த கேட்க உங்களை பார்த்துட்டு போலாம்னு தான் வந்தேன் என கூற பொய் சொல்லாத பணம் கேட்க தான வந்த என சொல்கிறார்.

அதற்கு ஆமாம் எனக்கு எப்ப பணம் தருவீங்க பணம் வாங்குவதற்கு முன்பு வளைகாப்பு முடிஞ்சதும் மொய் பணத்தை தந்ததுன்னு சொன்னீங்க இல்லனா வீடியோ போட்டு  பணத்தை தந்திடுவேன்னு சொன்னீங்க இப்ப எதுவுமே இல்லை பணம் வாங்கினவங்க வந்து என்ன அசிங்கப்படுத்த போறாங்க இது அவருக்கும், மாமியாருக்கும் தெரிஞ்சா பெரிய பிரச்சினையாகும் என்ன வீட்டுக்குள்ளேயே சேர்க்க மாட்டாங்க உங்களுக்கு உதவ போயி நான் நடுரோட்டில் நிக்கணுமா என பேசிக்கொண்டு இருக்க இந்த நேரத்தில் முல்லை மோர் எடுத்துக் கொண்டு வருகிறார் என்ன ஏதோ சீரியசா  பேசிக்கிட்டு இருக்கீங்க போல எனக்  கேட்க இல்லை என மூன்று பேரும் முழிக்கிறார்கள் இதோடு இந்த எபிசோடு நிறைவடைகிறது.