திருடனை கையும் களவுமாக பிடித்து தங்களுடைய ஹோட்டலை மீட்டெடுத்த பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர்.!

0
PANDIYAN-STORES
PANDIYAN-STORES

விஜய் டிவியில் வெற்றிகரமாக கடந்த சில வருடங்களாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் 4 அண்ணன் தம்பிகளின் ஒற்றுமையை மையமாக வைத்து இந்த சீரியல் ஒளிபரப்பாகி வரும் நிலையில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. மேலும் எவ்வளவு பிரச்சனைகள் வந்தாலும் அனைத்தையும் சமாளித்து ஒற்றுமையாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ்ந்து வருகின்றனர்.

அந்த வகையில் மீனாவின் அப்பா ஜகார்த்தனன் செய்த சதித்திட்டங்களால் தங்களுடைய வீட்டை இழந்து தற்போது வாடகை வீட்டில் வாழ்ந்து வருகின்றனர். இதனை அடுத்து இவர்களுடைய கடையையும் மூட வைத்த நிலையில் தங்களுடைய பழைய கடையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் மளிகை  சாமான்களை விற்று வருகிறார்கள்.

இவ்வாறு மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் திடீரென கதிரின் ஹோட்டல் மூடப்பட்டது. உணவில் கரப்பான் பூச்சி இருந்ததாக கூறி அதிகாரிகள் வந்து அந்த ஹோட்டலுக்கு சீல் வைத்தனர். இதனால் அனைவரும் அதிர்ச்சி அடைந்த நிலையில் என்ன நடந்தது என்று தெரியாமல் அனைவரும் குழப்பத்தில் இருந்து வந்தார்கள்.

இப்படிப்பட்ட நிலையில் தற்போது யார் இவ்வாறு செய்தது என்பதை பாண்டியன் ஸ்டோர்ஸ் மருமகள் கண்டுபிடித்து உள்ளனர். அதாவது ரத்தினம் என்பவர் வேலை கேட்டு பாண்டியன் ஸ்டோர்ஸ் ஹோட்டலுக்கு வர அவர்களும் வேலை கொடுத்தனர். அவர்தான் உணவில் கரப்பான் பூச்சியை வைத்து பார்சல் செய்துள்ளார்.

எனவே இதனை கண்டுபிடித்தவுடன் ரத்தினத்தை கதிர், ஜீவா இருவரும் அடிக்கின்றனர். மேலும் அவனை வீட்டிற்கு அழைத்து வர ஐஸ்வர்யா அவர்களும் பல்லார் பல்லார் என அழைக்கிறார். பிறகு அவரை தடுத்து நிறுத்த தனம் உன்னை எப்படி எல்லாம் பார்த்துக் கொண்டோம் நீ கேட்ட உடன் வேலை கொடுக்கும் எதற்காக இப்படி செஞ்ச எனக் கேட்க பிறகு சுந்தரம் தான் இவ்வாறு செய்ய சொன்னதை கூறுகிறார்.

உடனே ஜீவா காதிர் இருவரும் சுந்தரத்தின் வீட்டிற்கு செல்ல இவர்களைப் பார்த்தவுடன் சுந்தரம் அதிர்ச்சடைகிறார். பிறகு ரத்தினம் எங்களுடன் தான் இருக்கிறான் என கூற என்ன சொல்வது என்று தெரியாமல் முழிக்கிறான். கதிரின் ஹோட்டல் நன்றாக போனதால் அதனை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும் என நான் சுந்தரம் இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளான்.

பிறகு அடுத்த நாள் அதிகாரிகளிடம் இதனை பற்றி கூற உண்மை தெரிகிறது எனவே இரண்டு மூன்று நாட்களில் உங்களுடைய ஹோட்டல் திறக்கப்படும் என கூறிவிடுகிறார்கள். பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர்களும் மகிழ்ச்சியாக இருக்க பிறகு முல்லையின் அப்பா இப்ப எல்லாம் யாரை நம்புவது என்றே தெரியவில்லை என கூறி பேசிக் கொண்டிருக்கிறார் இதோ இன்றைய எபிசோடு முடிவடைகிறது.