தன்னுடைய மகளை வர வைப்பதற்காக மீண்டும் பிளான் போடும் ஜகார்த்தனன்.! தாங்குமா பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்..

விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது அந்த வகையில் தற்பொழுது மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். நான்கு அண்ணன் தம்பிகளின் பாச உறவினை மையமாக ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில் தொடர்ந்து ஏராளமான மாற்றங்கள் இருந்து வருகிறது.

அந்த வகையில் கதிர் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தை விட்டு தனியாக வாழ்ந்து வந்த நிலையில் தற்போது அனைவரும் ஒன்று சேர்ந்து உள்ளார்கள் மேலும் மீனாவின் அப்பா பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தின் பூர்விக வீட்டை வாங்கி உள்ள நிலையில் தற்போது இவர்கள் கதிருடன் இருந்து வருகிறார்கள். எப்படியாவது மீனாவை தன்னுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக ஜனார்த்தனன் பல முயற்சிகளை செய்து வருகிறார்.

அந்த வகையில் தற்பொழுது பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தின் கடையை காலி செய்து வைத்துள்ளார் எனவே தற்போது இவர்கள் தங்களுடைய பழைய கடையில் வியாபாரத்தை செய்து வருகிறார்கள். இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது மீனாவின் தங்கைக்கும் முல்லை அக்கா  மகனுக்கும் திருமணம் நடக்க இருக்கிறது எனவே மீனாவின் தங்கை தன்னுடைய திருமணத்திற்கு அழைப்பதற்காக வந்துள்ளார்.

அழுது கெஞ்சியும் மீனா வர முடியாது என பிடிவாதமாக கூறியுள்ளார் மேலும் ஜகார்த்தனனும் ஜீவாவை சந்தித்து திருமணத்திற்கு வருபவர்கள் மூத்த மருமகன் எங்கே என கேட்பாங்க எனவே மீனாவை அழைத்துக் கொண்டு வருமாறு கூறுகிறார் ஜீவாவும் முடியாது என சொல்ல பிறகு ஜகார்த்தனன் எப்படியாவது மீனாவை திருமணத்திற்கு அழைத்து வர வேண்டும் என புதிய பிளான் ஒன்றை போட முடிவு செய்து இருக்கிறார்.

மறுபுறம் மூர்த்தி மீனாவை திருமணத்திற்கு போக சொல்ல மீனா முடியாது என கூறிவிடுகிறார் கதிரும் முல்லையை உன்னுடைய அக்காவின் மகன் திருமணம் எனவே நீயும் போயிட்டு வா என கூற நீங்கள் இல்லாத இடத்தில் என்னால் போக முடியாது என முல்லை, மீனா இருவரும் பிடிவாதமாக கூறிவிடுகிறார்கள். இப்படிப்பட்ட நிலையில் ஜகார்த்தனன் புதிய பிளான் ஒன்றை போட உள்ள நிலையில் அதனை பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் தாங்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.