விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட வரும் பல சீரியல்கள் ரசிகர்களிடம் பிரபலமடைந்துள்ளது அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் இரவு ஒளிபரப்பட்ட சீரியல் ஆபீஸ், இந்த சீரியலுக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது, இந்த சீரியலில் வரும் ஒவ்வொரு ரொமான்ஸ் காட்சிகளும் ரசிகர்களுக்கும் பிடிக்கும், இந்த சீரியலில் விஷ்ணுவுக்கு ஜோடியாக நடித்திருந்தவர் மதுமிலா.

மேலும் ஆபிஸ் சீரியலில் விஷ்ணு, மதுமிலா உடன் கார்த்திக் மற்றும் சுருதியும் நடித்திருந்தார், கார்த்திக் மற்றும் சுருதி தற்பொழுது வேற வேற சீரியலில் நடித்து வருகிறார், செம்பருத்தி சீரியல் கார்த்திக் நடித்து வருகிறார் அதேபோல் சன் டிவியில் தென்றல் சீரியலில் சுருதி நடித்து வந்தார், விஷ்ணு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சத்யா என்ற சீரியலில் நடித்து வருகிறார்.

மேலும் ஆபிஸ் சீரியலில் நடித்த சில பிரபலங்கள் சீரியல்களிலும் படத்திலும் நடித்து வருகிறார்கள் ஆனால் அந்த சீரியலில் நடித்த மதுமிலா எந்த ஒரு சீரியலிலும் படத்திலும் நடிக்கவில்லை, எந்த நிகழ்ச்சியிலும் அவரை காண முடியவில்லை, இந்தநிலையில் இவரைப்பற்றி தேடியதில் இவர் கனடாவில் இருக்கிறார் எனத் தெரிய வந்துள்ளது, மேலும் ஏதோ ஒரு வேலை செய்கிறார் என்றும், வெளிநாடுகளில் சுற்றி திரிகிறார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனை உறுதி செய்யும் வகையில் பல புகைப்படங்கள் அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் அந்த புகைப்படங்கள் அனைத்தும் கனடாவிலும் வெளிநாடுகளிலும் எடுக்கப்பட்டதாகும். இந்த புகைப்படங்களில் மதுமிலா கொஞ்சம் உடல் எடையை அதிகரித்து காணப்படுகிறார் இதோ அந்த புகைப்படங்கள்.


