Madhumila latest video : விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் அதிலும் சமீபகாலமாக ஒளிபரப்பப்படும் சீரியல்கள் படத்தின் தலைப்பை வைத்து ஒளிபரப்பச் செய்து டி ஆர் பி எல் வெற்றி கண்டு வருகிறார்கள்.
இந்தநிலையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட ஆபிஸ் சீரியல் ரசிகர்களிடையே மிகவும் பிரபலம் ஏனென்றால் இந்த சீரியலில் காதல் காட்சிகள் அதிகம் இடம்பெறும், இந்த சீரியலை காணவே ரசிகர் கூட்டம் அலைமோதும், ஆபிஸ் சீரியலில் லட்சுமி என்ற கதாபாத்திரத்தில் நடித்து ஒட்டுமொத்த இளசு களையும் கட்டிப்போட்டவர் மதுமிலா.
இந்த சீரியலை அடுத்து பூஜை, ரோமியோ ஜூலியட், மாப்பிள்ளை சிங்கம், செஞ்சிட்டாளே என் காதல, சங்கிலி புங்கிலி கதவ தொற, ஆகிய திரைப்படங்களில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார், இந்தநிலையில் கடந்த ஆண்டு பெலிக்ஸ் ஜேம்சன் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
இவர் கர்ப்பமாகி தன்னுடைய கணவருடன் கனடாவில் வசித்து வந்தார், தற்பொழுது டவுனில் வீட்டிலேயே சிகிச்சை பெற்று வருகிறார் இந்த நிலையில் கடந்த மாதம் இவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது, தன்னுடைய குழந்தையின் புகைப்படத்தை சில தினங்களுக்கு முன்பு தன்னுடைய சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
#office #serial #madhumila pic.twitter.com/p3oWZFAGQx
— Tamil360Newz (@tamil360newz) May 18, 2020
மேலும் இவர் தற்பொழுது ஆள் அடையாளமே தெரியாமல் மாறியுள்ளார் இவருக்கு பல பிரபலங்கள் வாழ்த்து கூறி வருகிறார்கள்.
#office #serial #madhumila pic.twitter.com/055Gx27p3N
— Tamil360Newz (@tamil360newz) May 18, 2020