மக்கள் தொலைக்காட்சியின் மூலம் தொகுப்பாளினியாக தனது கேரியரை தொடங்கியவர் நடிகை மதுமிலா.
இதனைத் தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற ஆபீஸ் சீரியலின் மூலம் பிரபலமடைந்தார். தாயுமானவன், அக்னி சிறகுகள் போன்ற சீரியல்களிலும் நடித்துள்ளார்.
இவர் இலங்கையை சேர்ந்தவர் ஆவார்.மாடலிங் மூலம்தான் சினிமாவிற்கு அறிமுகமானார். இவர் சின்னத்திரையில் மட்டுமல்லாமல் வெள்ளித்திரையிலும் பூஜை, ரோமியோ ஜூலியட், மாப்பிள்ளை சிங்கம் போன்ற இன்னும் பல படங்களில் துணை நடிகையாக நடித்து வருகிறார்.
இந்நிலையில் திருமணத்திற்குப் பிறகு பெரிதாக சினிமாவில் ஆர்வம் காட்டாமல் இருந்து வந்தார். தற்பொழுது தன் கணவர் மற்றும் மகளுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
இவரின் மகள் பெயர் ஸீவ்ஸா. ஸீவ்ஸாவுக்கு 9 மாதமாகும் நிலையில் இப்புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் மதுமிளா.
இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் மதுமிளா கொஞ்சம் பப்பளிமாசு போல இருக்கிறீர்கள் என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.
இதோ அந்த புகைப்படம்.