ஒட்டுமொத்த தொலைக்காட்சியையும் ஓரங்கட்ட புதிய ஷோவை களமிறக்கும் விஜய் டிவி.! காமெடி ராஜா கலக்கல் ராணி..

பொதுவாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பல நிகழ்ச்சிகள் காமெடியை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வருவதால் அனைத்து ரியாலிட்டி ஷோக்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதோடு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பலருக்கும் திரைப்படங்கள் மற்றும் சீரியல்கள் போன்றவற்றில் நடிப்பதற்கு வாய்ப்புகள் கிடைத்து வருகிறது.

உதாரணமாக சிவகார்த்திகேயன், சந்தானம் போன்ற காமெடி நடிகர்களாக உருவெடுத்து தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வருகிறார்கள். அவர்களை தொடர்ந்து பலரும் விஜய் டிவியிலிருந்து வெள்ளித்திரைக்கு அறிமுகமாகியிருக்கிறார்.

அந்த வகையில் சமீப காலங்களாக ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் மற்றும் குக் வித் கோமாளி போன்ற நிகழ்ச்சிகள் வித்யாசமாக அமைந்ததால் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வெற்றியை பெற்றது. சமீபத்தில் கூட கடந்த நான்கு வருடங்களாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பல போட்டியாளர்கள் ஒன்றிணைந்து BB ஜோடிகள் என்ற டான்ஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.

இந்நிலையில் தற்பொழுது மீண்டும் ரசிகர்கள் விரும்பும் வகையில் புதிய நிகழ்ச்சி ஒன்றை அறிமுகப்படுத்தி உள்ளார்கள். அந்த வகையில் சீரியல் நடிகர் நடிகைகள் மற்றும் நிகழ்ச்சி நட்சத்திரங்கள் போன்றவர்கள் ஒன்றிணைந்து காமெடி ராஜா கலக்கல் ராணி என்ற புதிய நிகழ்ச்சி ஒன்றை அறிமுகப்படுத்த உள்ளார்கள்.

இந்த புதிய நிகழ்ச்சி ஜூன் 27ஆம் தேதி முதல் ஞாயிற்றுக்கிழமை மதியம் அறிமுகமாக உள்ளது. இந்நிலையில் தற்போது இந்த நிகழ்ச்சியின் ப்ரோமோ வெளிவந்துள்ளது. ப்ரோமோவே மிகவும் காமெடியாக இருப்பதால் கண்டிப்பாக நிகழ்ச்சியும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment