சன் டிவியை விஜய் டிவி அட்டை காப்பி அடிப்பதாக கூறி கலாய்க்கும் நெட்டிசன்கள்.! எதற்காக தெரியுமா.?

தற்பொழுது உள்ள அனைத்து தொலைக்காட்சிகளும் டிஆர்பி-யில் எப்படியாவது தங்களது சீரியல்கள் முன்னணியில் இருக்க வேண்டும் என்பதற்காக தொடர்ந்து எக்கச்சக்கமான சீரியல்களை ஒளிபரப்பி வருகிறார்கள். ரசிகர்கள் மத்தியில் பல சீரியல்கள் நல்ல வரவேற்ப்பை பெற்று வந்தாலும் ஒரு சில சீரியல்கள் மட்டும் கதைகள் ஒரே போன்று இருப்பது போலவும் சில மாற்றங்கள் மட்டுமே செய்து வருகிறார்கள்.

அதிலும் முக்கியமாக சூப்பர் ஹிட் பெற்ற ஒரு சில சீரியல்களின் கதையை அப்படியே வைத்து வேறு ஒரு பெயரில் பிரம்மாண்டமாக தயாரித்து வரும் சீரியல்களும் இருக்கிறது.  இப்படித்தான் வெகுநாட்களாக மாற்றி மாற்றி குண்டு சட்டிக்குள்லேயே குதிரை ஓட்டி வருகிறார்கள்.

அந்தவகையில் பல ஆண்டு காலங்களாக பல சீரியல்களை ஒளிபரப்பி சீரியல்களுக்கு என்றே பெயர் போன ஒரு தொலைக்காட்சி சன் டிவி. சன் டிவி  இளம் ரசிகர்களை விடவும் குடும்ப இல்லத்தரசிகள் வயதானவர்கள் தான் அதிகம்.

இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது கொரோனா ஊரடங்கு என்பதால் படப்பிடிப்புகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எனவே சன் டிவி நன்றாக புரிந்து கொண்டு போன ஊரடங்கில் தொடர்ந்து பல திரைப்படங்களை ஒளிபரப்பி வந்தார்கள்.  அதோடு மெட்டி ஒலி போன்ற பழைய வெற்றி பெற்ற சீரியல்களையும் ஒளி பரப்பி இருந்தார்கள்.

இந்நிலையில் சன்டிவி விடவும் தற்போது விஜய் டிவியும் இளசுகளின் மனதை கவரும் வகையில் பல சீரியல்களை ஒளிபரப்பி சன்டிவி ஓவர்டேக் செய்யும் அளவிற்கு வளர்ந்து உள்ளார்கள். சன் டிவி போன்று விஜய் டிவியும் தங்களது பழைய வெற்றிபெற்ற சீரியல்களை ஒளிபரப்பி வருகிறார்கள். அந்த வகையில் தற்போது சூப்பர் ஹிட் பெற்ற சீரியலானா மகாபாரதத்தை மீண்டும் ஒளிபரப்ப உள்ளார்கள் விஜய் டிவி.

Leave a Comment