விஜய் டிவியின் புதிய நிகழ்ச்சியில் களமிறங்கும் பிக்பாஸ் ஆரி மற்றும் அவரின் மனைவி.! வைரலாகும் ப்ரோமோ.

0

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தவர் நடிகர் ஆரி. இவர் இந்நிகழ்ச்சியில் மிகவும் நேர்மையாகவும் எதனையும் மாற்றி பேசாமல் இருந்ததால் ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தார்.ஒரு கட்டத்துக்குப் பிறகு இந்நிகழ்ச்சியில் சக போட்டியாளர்கள் அனைவரும் இவருக்கு எதிராக இருந்து வந்தார்கள்.

எவ்வளவு பிரச்சனை வந்தாலும் அனைத்தையும் எதிர்த்து மிகவும் நேர்மையான இருந்த ஆரியை ஒட்டுமொத்த ரசிகர்களுக்கும் பிடித்து விட்டது. எனவே பிக்பாஸ் சீசன்  4 வெற்றியாளராக ஆரியை தேர்ந்தெடுத்தார்கள். இந்நிகழ்ச்சிக்குப் பிறகு தொடர்ந்து ஹீரோவாக ஏராளமான திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இவர் நடிப்பில் பகவான் திரைப்படம் திரைக்கு வர இருக்கிறது. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு  முப்பரிமாணம், நாகேஷ் திரையரங்கம், நெடுஞ்சாலை உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களில் நடித்திருந்தாலும் பிக்பாஸ் நிகழ்ச்சி தான் இவரின் திரை வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது.

நடிகர் ஆரி 2015ஆம் ஆண்டு இலங்கையைச் சேர்ந்த தமிழ் பெண்ணான நதியா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தற்போது அழகான பெண் குழந்தை ஒன்று உள்ளது. இவ்வாறு ஆரியின் மனைவி மற்றும் குழந்தையும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார்.

இப்படிப்பட்ட நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் ஆரி விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ள புதிய நிகழ்ச்சி ஒன்றில் தனது மனைவியுடன் பங்கு பெறவுள்ளார். அதாவது நம்ம வீட்டு கல்யாணம் என்ற பிரமாண்டமான நிகழ்ச்சியில் ஆரி தன் மனைவியுடன் பங்கு பெறுகிறார்.  ஆரிய தொடர்ந்து நகுல் மற்றும் சின்னத்திரை நடிகர் நடிகைகளும் அவரவர்களின் துணைவர்களுடன் பங்குப்பெற கொள்கிறார்கள்.அந்த நிகழ்ச்சியின் ப்ரோமோ சமீபத்தில் வெளியாகி ட்ரெண்டிங்காக இருந்து வருகிறது.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.