தனது தங்கையின் ஆசைக்காக மனநலம் பாதிக்கப்பட்டவரை திருமணம் செய்து கொள்ளும் அக்கா.! விஜய் டிவியின் புதிய சீரியல் ப்ரோமோவுடன் இதோ.!

விஜய் டிவி ஏதாவது ஒரு சீரியலை ஒளிபரப்பினால் அது எப்பொழுதும் வித்தியாசமாகவும் சுவாரசியமாகவும் இருக்கும் அந்த வகையில் தொடர்ந்து ஏராளமான புதிய சீரியல்கள் ஒளிபரப்புவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். அப்படி சமீபத்தில் புதிதாக அறிமுகமாக உள்ள சீரியல்தான் சிப்பிக்குள் முத்து.

விஜய்டிவி பொருத்தவரை விஜய் டிவியில் எது வெளியிடப்பட்டாலும் அது டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் என்னும் ஊடகத்திலும் வெளியிடப்படும். அதில் தற்பொழுது சிப்பிக்குள் முத்து என்னும் நாடகக் கதையின் புரோமோ வெளியிடப்பட்டுள்ளது. இந்த புரோமோவில் ஒரு அக்கா தனது தங்கைக்காக தனது ஆசைகளை விட்டு விலகி வேறு ஒருவரை திருமணம் செய்து கொள்வாள். அதிலும் திருமணம் செய்துகொண்ட பையன் ஒரு மனநலம் பாதிக்கப்பட்டவர் ஆவார்.

அதில் அக்கா கூறுவது, நான் என்னுடைய ஆசைகளெல்லாம் விட்டு விலகி இத்தகைய திருமணம் செய்து கொள்வது எனது தங்கையின் விருப்பமான வாழ்க்கைக்காக, நான் அவளுக்கு அக்கா மட்டுமல்ல அம்மாவும் தான். இதில் தங்கை தான் விரும்பிய பையனை திருமணம் செய்து கொள்வாள்,அதற்கு ஈடாக அதே வீட்டில் இருக்கும் தங்கச்சியின் காதலனின் சகோதரனை அக்கா திருமணம் செய்து கொள்ள வேண்டும்,இதுதான் இக்கதையில் இருக்கும் ஒரு ஒப்பந்தமாகும்.

என்னதான் தங்கச்சியாக இருந்தாலும் அக்கா தனது ஆசைகளை விட்டு விலகி ஒரு மனநலம் பாதிக்கப்பட்டவரை திருமணம் செய்வது என்பது மிகவும் கஷ்டமான விஷயம், இருந்தாலும் அதை எப்படி அக்கா சமாளிக்கிறாள் என்பதை எடுத்துச் சொல்வதுதான் இக்கதை. விஜய் டிவியில் ஒளிபரப்பப்படும் அனைத்து நாடகமும் குடும்பத்தோடு ஒன்றாக பார்ப்பதற்கு நன்றாகவே இருக்கும் அதில் இதுவும் ஒன்றாக அமையும் என்று நம்புகின்றோம்.

என்னதான் விஜய்டிவி வித்தியாசமான கதைகளை நாடகமாக்கினாலும் இவ்வளவு வித்தியாசமாக இருந்திருக்க கூடாது, என்னவாக இருந்தாலும் சரி நாடகத்திலிருந்து நல்ல விஷயமே வெளிப்படும் என்று நம்புகிறோம்.

Leave a Comment