ஆசை இருந்தும் வெளியில் காமித்து கொள்ளாத மீனாட்சி.! கார்த்திக் செய்யும் செயலால் நெகிழ்ச்சியடையும் ரசிகர்கள்..

0
namma-veetu-ponnu
namma-veetu-ponnu

விஜய் டிவியில் தொடர்ந்து ஏராளமான சீரியல்களை ஒளிபரப்பாகி வரும் நிலையில் தற்பொழுது குடும்ப கதையை மையமாக வைத்து இல்லத்தரசிகளின் மனதை வெகுவாக கவர்ந்து வரும் சீரியல்தன் நம்ம வீட்டு பொண்ணு. இவ்வாறு குடும்ப சீரியலாக ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல ஆதரவு கிடைத்து வருகிறது.

பொதுவாக ஏராளமான சீரியர்கள் திரைப்படங்களின் கதையை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வரும் நிலையில் இந்த சீரியலும் விஜயின் திரைப்படமான பிரியமானவளே திரைப்படத்தில் விஜய் மற்றும் சிம்மரன் எப்படி அக்ரிமென்ட் போட்டு திருமணம் செய்து கொள்வார்களோ அதே போல் இந்த சீரியலின் கதாநாயகி மற்றும் கதாநாயகனான கார்த்திக் மற்றும் மீனாட்சி இவர்கள் இருவரும் அக்ரிமெண்ட் முறையில் திருமணம் செய்து கொள்கிறார்கள்.

திருமணத்திற்குப் பிறகு எலியும் பூனையுமாக இருந்த வந்த இவர்கள் சமீப காலங்களாக காதலித்து வருகின்றனர். இந்த சீரியலில் இவர்களை தொடர்ந்து ஏராளமான நடிகர், நடிகைகள் நடித்து வருகிறார்கள் என்ன பிரச்சினை வருகிறது என்பதை மையமாக வைத்தும் அதனை எப்படி சமாளிக்கிறார்கள் என்பதை வைத்தும் ஒளிபரப்பாகி வருகிறது.

இவ்வாறு மிகவும் சுவாரசியமாக ஓடிக்கொண்டிருக்கும் இந்த சீரியலின் ப்ரோமோ சமீபத்தில் வெளியாகியுள்ளது. அதில் அக்ரிமெண்ட் படி தற்பொழுது திவ்யா மற்றும் கார்த்திக் இருவருக்கும் திருமணமாக இருக்கிறது எனவே கார்த்திக் மீனாட்சியிடம் எங்களுடைய திருமணத்தை நீ வருவில,  நீயும் இன்னொரு திருமணம் செய்து கொள்வில, என்று கூற மீனாட்சி சத்தியமா என் வாழ்க்கையில் திருமணம் செய்து கொள்ளமாட்டேன் என்று கூறுகிறார்.

மேலும் மீனாட்சி பாஸாக வேண்டும் என்பதற்காக கார்த்திக் டீ போட்டுக் கொடுத்து அவளை படிக்கவைக்கிறான்.  இவ்வாறு கார்த்திக்கிற்கு மீனாட்சியுடன் இணைந்து வாழ ஆசை இருக்கிறது ஆனால் மீனாட்சிக்கு இந்த ஆசை இருந்தும் அதனை வெளியில் காண்பித்துக் கொள்ளமாட்டங்கீறார்.