ராஜா ராணி திரைப்படத்தையே மிஞ்சிய நம்ம வீட்டு பொண்ணு சீரியல்.! ப்ரோமோவை பார்த்து கலாய்க்கும் நெட்டிசன்கள்..

தற்பொழுது உள்ள அனைத்து தொலைக்காட்சிகளும் போட்டி போட்டுக்கொண்டு வித்தியாசமான கதைவுள்ள பல சீரியல்களை அறிமுகப்படுத்திய வருகிறார்கள். அதுவும் சோஷியல் மீடியாவின் மூலம் பிரபலமாகியுள்ள ஏராளமான நபர்கள் தற்போது சின்னத்திரையில் நடிக்க வைப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.

அந்த வகையில் தொடர்ந்து டிஆர்பி-யில் முன்னணி தொலைக்காட்சியாக வலம் வந்து கொண்டிருப்பது விஜய் டிவி. தொடர்ந்து விஜய் டிவி வித்யாசமான கதை உள்ள சீரியல்கள் மற்றும் ரியாலிட்டி ஷோக்களை ஒளிபரப்பி வருகிறார்கள்.

அதோட திரைப்படங்களை மிஞ்சும் அளவிற்கு பல சீரியல்கள் ஒளிபரப்புவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். அந்த வகையில் ஒரு சீரியல் தான் நம்ம வீட்டு பொண்ணு. இந்த சீரியல் அறிமுகமான சில கால கட்டத்திலேயே ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது.

அதோடு சீரியலில் நடித்து வரும் அனைத்து நடிகர் நடிகைகளுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல ஒரு வரவேற்பு கிடைத்து வருகிறது. இப்படிப்பட்ட நிலையில் ராஜா ராணி திரைப்படத்தில் இடம்பெற்றிருக்கும்  ஏர்போட் சீன் போல நம்ம வீட்டு பொண்ணு சீரியலிலும் எடுக்கப்பட்டுள்ளது.அந்த ப்ரோமோ சமீபத்தில் வெளியாகி இருந்த நிலையில் இதனை பார்த்த ரசிகர்கள் அனைவரும் சீரியலை கலாய்த்து வருகிறார்கள். இதோ அந்த வீடியோ.

 

Leave a Comment