தூங்க முடியாமல் தவிப்பதால் தனது வீட்டில் இருந்தே வருணை தூங்க வைப்பதற்காக பாட்டு படம் சத்யா.! இன்றைய முழு எபிசோடு இதோ..

விஜய் டிவியில் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் மௌனராகம் 2.  இந்த சீரியலின் முதல் பாகம் அமோக வெற்றிபெற்ற நிலையில் இரண்டாவது பாகமும் அறிமுகமாகி சில வாரங்களிலேயே டிஆர்பி-யில்  இடத்தை பிடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது.

இந்த சீசனில் சத்யா மற்றும் ஸ்ருதி இருவரும் வளர்ந்து ஒரே வீட்டில் மருமககளாக வாழ்ந்து வருகின்றனர்.  மல்லிகாவிற்கு ஆப்ரேஷன் செய்ய வேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்ததால் வேறு வழி இல்லாமல் வருணை திருமணம் செய்து கொள்கிறார் சத்யா.

சத்யாவை தருண் காதலித்து வந்த நிலையில் மிகவும் கஷ்டத்தில் இருந்து வரும் நேரத்தில் ஸ்ருதி தருணை மிரட்டி திருமணம் செய்து கொண்டார்.  பிறகு சத்யாவை வீட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என பல முயற்சிகள் செய்து வந்த நிலையில் ஒரு கட்டத்திற்கு பிறகு என்னுடைய அப்பா கார்த்திக் கிருஷ்ணாவின் மூத்த மகள் தான் சத்யா என்பதை அறிந்துகொள்கிறார் ஸ்ருதி.

பிறகு பல பிரச்சனைகள் ஏற்பட்ட நிலையில் சத்யா என நம்பாது வீட்டில் நான் இதற்கு மேல் இருக்க மாட்டேன் என்று கூறிவிட்டு அந்த வீட்டை விட்டு வெளியேறி விடுகிறான். தற்பொழுது சத்யா தனது அம்மா மற்றும் அத்தை, மாமா ஆகியோர்களுடன் வாழ்ந்து வருகிறார்.

வருண் எப்படியாவது சத்யாவை அழைத்துவிட்டு தான் வீட்டிற்கு போவேன் என்று பிடிவாதத்தில் இருந்து வருகிறார். சத்யாவின் வீட்டிற்கு பக்கத்தில் ஒரு வீட்டில் வாடகைக்கு இருந்த நிலையில் அந்த வீட்டுக்காரரும் வருணை வீட்டை விட்டு வெளியேற்றி விட்டார்கள்.

தற்பொழுது வருண் காரில் தான் தங்கி வருகிறார். பிறகு சாப்பிடுவதற்கு பணமில்லாத காரணத்தினால் சத்யா வேலை செய்துவரும் தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்து வருகிறார்.  அங்கு எப்படி போவது என்று தெரியாமல் கூலிங்கிளாஸ், ஃபேன்ட்,ஷேட் என போட்டுக் கொண்டு செல்கிறார் அனைவரும் அவரை பார்த்து சிரிக்கிறார்கள்.

பிறகு கைலியும், சட்டையையும் மாத்திக்கிட்டு வருகிறார்.  இதனை அனைத்தையும் பார்த்து சத்யா வேதனை அடைந்து வரும் நிலையில் மல்லிகா சத்யாவிடம் பேச கூடாது என்று சத்தியம் வாங்கிக்கொண்டாள்.  இப்படிப்பட்ட நிலையில் தூக்கம் வராமல் வருண் தவித்து வருவதால் சத்யா தனது வீட்டில் இருந்து வருணைப் பார்த்துவிட்டு அவருக்காக பாடல் பாடி வருணை தூங்க வைக்கிறார் இதுதான் இன்றைய எபிசோடில் ஒளிபரப்பாக இருக்கிறது.

Leave a Comment