வருணுடன் பேச கூடாது என சத்யாவிடம் சத்தியம் வாங்கிய மல்லிகா.! வெளிவந்த இன்றைய எபிசோட்..

சின்னத்திரையில் முக்கிய தொலைக்காட்சியாக வளம் வந்து கொண்டிருப்பதுதான் விஜய் டிவி. தொடர்ந்து பல தொலைக்காட்சிகள் ஏராளமான சீரியல்களை ஒளிபரப்பி வந்தாலும் விஜய் டிவி அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் எந்த தொலைக்காட்சிகளும் பிரபலமடையவில்லை என்றுதான் கூற வேண்டும்.

ஏனென்றால் விஜய் டிவி தொடர்ந்து வித்தியாசமான கதை உள்ள மிகவும் சுவாரசியமாக இருக்கும் வகையில் சீரியல்களை ஒளிபரப்பி வருகிறார்கள். அந்த வகையில் ஒரு சில சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பினை பெற்ற மிகப் பெரிய வெற்றியை பெற்று விட்டால் அதனை இரண்டாவது,மூன்றாவது சீசன் ஒளிபரப்புவதையும் வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.

அந்த வகையில் ஒரு சீரியல் தான் மௌனராகம். இந்த சீரியலில் வெள்ளித்திரையில் நடித்த ஏராளமான கேரக்டர்கள் நடித்து வருகிறார்கள். மேலும் முதல் சீசன் வெற்றிகரமாக முடிந்த நிலையில் இரண்டாவது சீசன் அறிமுகமான சில காலகட்டத்திலேயே ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து டிஆர்பி-யில் முன்னணி வகித்து வருகிறது.

ஒரே வீட்டில் மருமகளாக ஸ்ருதி மற்றும் சத்யா வாழ்ந்து வருகிறார்கள். சத்யாவை எப்படியாவது வீட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்பதற்காக பல சதித் திட்டங்களை தீட்டி சுருதி சத்யாவை வீட்டைவிட்டு வெளியேற்றினார். ஒரு கட்டத்திற்கு மேல் கோபமடைந்து சத்தியா எனது அப்பா கார்த்திக் தான் அம்மா மல்லிகா என்று கூற அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

என்னை நம்பாத வீட்டில் இதற்கு மேல் நான் இருக்க மாட்டேன் என்று கூறிவிட்டு சத்யா தனது அம்மாவுடன் இருந்து வருகிறார். மல்லிகாவின் அண்ணன் மற்றும் அண்ணியை அழைத்துக் கொண்டு வருண் மல்லிகா மற்றும் சந்தியா இருக்கும் இடத்திற்கு சென்றான்.

அங்கு போயும் மல்லிகா வருணை ஏற்றுக் கொள்ளாத காரணத்தினால் எப்படியாவது அனைத்து பிரச்சனைகளையும் சரிசெய்து சத்யாவை தன்னுடன் அழைத்து கொண்டு வீட்டிற்கு செல்ல வேண்டும் என வருண் ஒரு முடிவுடன் இருந்து வருகிறான்.

இப்படிப்பட்ட நிலையில் வருண் மற்றும் தருண் இருவரும் போனில் பேசிக் கொண்டிருப்பதை ஒட்டுக்கேட்ட சுருதியை தனது மாமனாரிடம் வருண் சத்யாவை தேடி தான் போய் உள்ளார் என்பதை சொல்ல உடனே வருணின் அப்பா கிளம்பி கெரளாவிற்கு வருகிறார்.

வந்து வருணை வீட்டிற்கு வா என கூப்பிட வரமுடியாது என்று கூறிவிட்டார். மேலும் வருணின் அப்பா மற்றும் அத்தை இருவரும் மல்லிகா, மல்லிகாவின் அண்ணன், அண்ணியிடம் பேச மேலும் வாக்குவாதம் ஏற்பட்ட பிரச்சனை ஆகிவிட்டது. இதன் காரணமாக இதற்கு மேல் நீ வருணுடன் வாழ வேண்டாம் எனக்கு சத்தியம் செய்து கொடு என்று மல்லிகா சத்தியம் வாங்கிக் கொண்டார். இதுதான் இன்றைய எபிசோடு நடக்க இருக்கிறது.

Leave a Comment