குக் வித் கோமாளி 3 ஏற்படும் மாற்றங்கள்!! புது கோமாளி மற்றும் குக்!! இந்த கோமாளிகளை ஏற்றுக் கொள்வார்களா ரசிகர்கள் …

0

பிரபல விஜய் டிவி தொடர்ந்து வித்தியாசமான ரசிகர்களை கவரும் வகையில் பல ரியாலிட்டி ஷோக்களை ஒளிபரப்புவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். அதுவும் பொதுவாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து நிகழ்ச்சிகளும் காமெடியை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வருவதால் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது.

அந்த வகையில் சமையல் நிகழ்ச்சியாக இருந்தாலும் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என்று ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் பல அட்டகாசங்களை செய்த நிகழ்ச்சி தான் குக் வித் கோமாளி இந்நிகழ்ச்சியின் முதல் சீசனின் வெற்றியை  தொடர்ந்து 2வது சீசன் ஒளிபரப்பானது.

அந்த வகையில் முதல் சீசனை விடவும் இரண்டாவது சீசன் தான் அமோக வெற்றியைப் பெற்றது. ஏனென்றால் முதல் சீசனை விடவும் பெரும்பாலும் இரண்டாவது சீசனில் இளம் வயது உடையவர்கள் தான் கலந்து கொண்டார்கள்.  இதன் மூலம் பிரபலமடைந்த ஏராளமானோர் சமீபத்தில் திரைப்படங்கள் நடிப்பதற்காகவும் கமிட்டாகி உள்ளார்கள்.

இவ்வாறு ரசிகர்கள் மத்தியில்  அமோக வரவேற்பை பெற்று வருவதாலும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கும் என்றும் ஏராளமானோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக போட்டி போட்டுக் கொண்டு வருகிறார்கள்.

இப்படிப்பட்ட நிலையில் இரண்டாவது இதனை தொடர்ந்து மூன்றாவது சீசன் ஒளிபரப்பாக உள்ளது.ஆனால் மூன்றாவது சீஸனில் பல மாற்றங்கள் இருக்கும் என்ற தகவல் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அதுவாவது இந்நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணியாற்றி வந்த ரக்ஷானுடன் இணைந்து  சீசன் 3 இல் மணிமேகலையும் தொகுப்பாளராக பணியாற்ற உள்ளாராம்.

இதனைத் தொடர்ந்து பிக்பாஸ் புகழ் சினேகன், சித்தி 2 சீரியல் புகழ் நந்தன் லோகநாதன், டப்பிங் ஆர்ட்டிஸ்ட் ஜெய கீதா,சீரியல் நடிகர் அமித்,நடிகை ஐஸ்வர்யா, சுரேஷ் சக்கரவர்த்தி, சீரியல் நடிகை ஸ்ரீநிதி ஆகியோர்கள் இந்நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் போட்டியாளர்களாக களமிறங்க உள்ளார். அதோடு கோமாளிகளாக புதிதாக தீபா அக்கா மற்றும் சூப்பர் சிங்கர் மூக்குத்தி முருகன் அவர்களும் பங்கு பெற உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.