திடீரென திருமணம் செய்துக் கொண்ட KPY தீனா.! பெண் யார் தெரியுமா.? வைரல் புகைப்படம்..

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஏராளமான நிகழ்ச்சிகளுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் இதன் மூலம் பிரபலம் அடைந்தவர்கள் பலர உள்ளனர். மேலும் ஏராளமானவர்கள் இந்நிகழ்ச்சியின் மூலம் தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்தி தற்பொழுது வெள்ளித் திரையிலும் ஏராளமான திரைப்படங்களில் நடித்து கலக்கி வருபவர்கள் இருந்து வருகின்றனர்.

அப்படி முக்கியமான நிகழ்ச்சி தான் கலக்கப்போவது யாரு இந்நிகழ்ச்சிக்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்த நிலையில் இதன் மூலம் பட்டித்தொட்டி எங்கும் பிரபலமானவர் தான் தீனா. இந்நிகழ்ச்சியில் சரத் என்பவருடன் இணைந்து ஏராளமான காமெடிகளை வெளிப்படுத்தி வந்த நிலையில் இதன் மூலம் பிரபலமானவர்.

பிறகு தொகுப்பாளராகவும் பணியாற்றி வந்த நிலையில் திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார். அந்த வகையில் பா பாண்டி, தும்பா, கைதி, மாஸ்டர் போன்ற முன்னணி நடிகர்களின் திரைப்படங்களிலும் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார். இதனை அடுத்து ஏராளமான நிகழ்ச்சிகளில் கால் செய்து பிரபலங்களை கலாய்ப்பதையும் வழக்கமாக வைத்திருக்கிறார்.

எனவே தீனாவின் காமெடி என்றாலே பலருக்கும் பிடிக்கும். இவ்வாறு வெற்றிகரமாக சினிமாவில் பயணித்து வரும் தீனா சமீபத்தில் மிகவும் பிரம்மாண்டமான புதிய வீடு கட்டியிருந்த நிலையில் அந்த வீட்டின் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலானது எனவே பலரும் இவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தனர்.

இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது ஜூன் 1ஆம் தேதியான இன்று தீனாவிற்கு திருவாரூரில் மிகவும் கோலாகலமாக திருமணம் நடந்து இருக்கிறதாம். தீனா திருமணம் செய்து கொள்ள இருக்கும் அந்த பெண் கிராப்ட் டிசைனராக பணியாற்றி வருகிறாராம். இது தீனாவிற்கு பெற்றோர்கள் பார்த்து வைத்து திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது.

deena 1
deena 1

தீனாவிற்கு இன்று திருமணம் முடிந்திருக்கும் நிலையில் அந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாக ஏராளமான சின்னத்திரை பிரபலங்கள் மற்றும் வெள்ளித்திரை பிரபலங்களும் பங்கு பெற்றுள்ளனர் அந்த வகையில் தீனாவுடன் குக் வித் கோமாளி சரத் இருக்கும் புகைப்படம் இதோ.

Leave a Comment