கனா காணும் காலங்கள் சீரியலின் மூலம் பிரபலமடைந்து தற்பொழுது பிரபல ஹீரோவாக கலக்கி வரும் பிரபலத்திற்கு நிச்சயதார்த்தம் முடிந்தது.! வைரலாகும் புகைப்படம்..

0
kanaa-kaanum-kalangal-1
kanaa-kaanum-kalangal-1

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஏராளமான சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது அந்த வகையில் இளசுகளின் மனதை கவர்ந்த சீரியல்தான் கனா காணும் காலங்கள். 90ஸ் கிட்ஸ்களின் பேவரைட் தொடராக இருந்து வந்த நிலையில் தற்போது வரையிலும் இந்த சீரியலை யாராலும் மறக்க முடியாது கடந்த 2006ஆம் ஆண்டு பள்ளி செல்லும் சிறுவர்களை வைத்து ஒளிபரப்பான தொடர் தான் கனா காணும் காலங்கள்.

இந்த சீரியல் டிஆர்பியில் டாப்பில் இருந்து வந்தது. இந்த சீரியலினை அடுத்து கனா காணும் காலங்கள் கல்லூரியின் கதை மற்றும் கனா காணும் காலங்கள் கல்லூரி சாலை என்ற தொடர்கள் ஒளிபரப்பானது இந்த இரண்டு தொடர்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

90ஸ் ஃபேவரைட் சீரியலான கனா காணும் காலங்கள் மூலம் பட்டிதட்டி எங்கும் பிரபலமானவர் தான் கிரண். இந்த சீரியலினை அடுத்து நடன நிகழ்ச்சிகளில் பங்கு பெற்று வந்தார் அந்த வகையில் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மாநாடு மயிலாட நிகழ்ச்சிகள் பங்கு பெற்று இருந்தார். இதன் மூலம் சினிமாவில் பிரபலம் அடைந்த இவர் பிறகு திரைப்படங்களிலும் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்று பிரபல நடிகராக திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.

kanaa kaanum kalangal
kanaa kaanum kalangal

அந்த வகையில் அம்முக்குட்டி அம்மாவுக்கு என்ற சீரியலில் நடிக்கிறான் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படிப்பட்ட நிலையில் தற்போது கிரணுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்று முடிந்துள்ளது அது குறித்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வரும் நிலையில் அந்த புகைப்படத்தை தன்னுடைய வருங்கால மனைவிக்கு மோதிரம் அணிவிக்கும் புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.

kiran 1
kiran 1

நடிகர் கிரண் இவர் மஞ்சுஷா காரம்லா என்ற திருமணம் செய்ய  இருக்கிறார் இந்நிலையில் இவருடைய புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாக இவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இவர் கனா காணும் காலங்கள் சீரியலினை அடுத்து ஏராளமான சீரியல்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

kiran
kiran