சிவகார்த்திகேயனுடன் ஆட்டம் போட்ட விஜய் டிவி பிரபலம் ஆனந்தியா இது.? திருமணத்திற்கு பிறகு எப்படி இருக்கிறார் பார்த்தீர்களா.!

0
ananthi-
ananthi-

சினிமாவில் பொதுவாக நடிகர்கள் திருமணம் செய்து கொண்டாலும் சினிமாவில் படங்களில் நடித்து வருவார்கள் ஆனால் நடிகைகள் மட்டும் திருமணம் செய்துகொண்ட பிறகு ஆள் அட்ரஸ் இல்லாமல் போய்விடுவார்கள். அந்தவகையில் பல நடிகைகள் திருமணத்திற்குப் பிறகு நடிப்பில் முழு கவனம் செலுத்தவில்லை.

அப்படித்தான் விஜய் டிவி பிரபலம் ஆனந்தி உங்களுக்கு நினைவிருக்கிறதா.? விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பப்பட்டு வந்த ஜோடி என்ற நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களுக்கு தெரிந்த முகமாக அறியப்பட்டவர் ஆனந்தி இவர் சிவகார்த்திகேயனுக்கு போட்டியாளர்களாக அறியப்பட்டவர்.

மேலும் பாய்ஸ் vs கேர்ள்ஸ் என்ற நடன நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயனிடம் இவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் அப்பொழுது அந்த வீடியோ மிகவும் வைரலானது. அந்த நிகழ்ச்சிக்கு பிறகு தொலைக்காட்சியில் சீரியலில் நடித்து வந்த ஆனந்தி வெள்ளித்திரையில் தாரை தப்பட்டை, மிகாமல், ராஜா மந்திரி, வாலு போன்ற திரைப்படங்களிலும் துணை நடிகையாக நடித்து வந்தார்.

ananthi
ananthi

தொடர்ந்து சீரியலில் நடித்த வந்து ஆனந்தி 2017 ஆம் ஆண்டு அஜய் என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டு செட்டிலானார் இவர்கள் திருமணம் ஆந்திராவில் நடைபெற்றது அதில் பல நட்சத்திர பிரபலங்கள் கலந்து கொண்டார்கள்.

திருமணத்திற்கு பிறகு இவருக்கு ஒரு அழகான ஆண் குழந்தை இருக்கிறது அந்த குழந்தைக்கு ஆர்யாவீர் என பெயர் வைத்திருந்தார்கள். சமீபத்தில்தான் அந்த குழந்தைக்கு மூன்றாவது பிறந்தநாள் கொண்டாடினார்கள். இந்த நிலையில் திருமணத்திற்கு பிறகு ஆனந்தி  எப்படி இருக்கிறார் என பலரும் யோசித்து வரும் நிலையில் அவரின் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

ananthi
ananthi-