புசுபுசுன்னு இருந்த விஜய் டிவி தொகுப்பாளினி ஜாக்லினா இது.! செம ஸ்லிம்மாக ஜிவ்வுன்னு இருக்கும் புகைப்படம்

சினிமாவில் இருக்கும் நடிகைகளுக்கு ரசிகர் கூட்டம் எப்படி இருக்கிறார்களோ அதேபோல் சின்னத்திரையில் உள்ள சீரியல் நடிகைகள் மற்றும் தொகுப்பாளினிகளுக்கு மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது, அந்த வகையில் தன்னுடைய கலகலப்பான பேச்சு, கரகரப்பான குரல் என மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் வளைத்துப் போட்டவர் ஜாக்லின்.

இவர் விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட கனா காணும் காலங்கள் மற்றும் ஆண்டாள் அழகர் போன்ற சீரியல் மூலம் மிகவும் பிரபலம் அடைந்தவர் அதன்பிறகு கோலமாவு கோகிலா என்ற திரைப்படத்தில் நயன்தாராவுக்கு தங்கையாக நடித்து தனது நடிப்பு திறமையை வெள்ளித்திரைக்கு காட்டினார்.

ஜாக்குலின் அடுத்த பட வாய்ப்பு பிடித்துவிட வேண்டும் என உறுதியாக இருக்கிறார் அந்த வகையில் அடிக்கடி சமூக வலைதளத்தில் புகைப்படத்தை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

ஜாக்குலின் பொதுவாக குண்டாக கொழுக்கு மொழுக்கென்று இருப்பார் ஆனால் தற்பொழுது இவர் பீச்சில் எடுத்துக்கொண்ட புகைப்படம் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தில் ஜாக்லின் செம்ம ஸ்லிம்மாக ஹீரோயின் போல் போஸ் கொடுக்கிறார்.

மேலும் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஜாக்குலினா இது என கமென்ட் செய்துவருகிறார்கள். அது மட்டுமில்லாமல் புகைப்படத்தை பார்த்து வர்ணித்து வருகறார்கள், தற்பொழுது சீரியலில் நடித்து வரும் இவர் பட வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக நடிப்பேன் என கூறியுள்ளார்.

jackline-tammil360newz

Leave a Comment

Exit mobile version