குக் வித் கோமாளி 4வது சீசனில் புதிய கோமாளிகளை களம் இறக்கிய விஜய் டிவி.! ஆனால் புகழ், பாலாவை காணுமே.?

0
cook-with-comali-4
cook-with-comali-4

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரியல் டிஷோக்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் நம்பர் 1 ரியாலிட்டி ஷோவாக வலம் வந்து கொண்டிருக்கும் நிகழ்ச்சி தான் குக் வித் கோமாளி இந்நிகழ்ச்சி தொடர்ந்து மூன்று சீசன்கள் மிகவும் வெற்றிகரமாக முடிந்த நிலையில் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பினை பெற்றது என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.

இது சமையல் நிகழ்ச்சியாக இருந்தாலும் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் காமெடி கலாட்டா என மிகவும் சிறப்பாக அமைந்தது எனவே மன அழுத்தம் இருப்பவர்கள் பலரும் இந்நிகழ்ச்சியின் மூலம் அதிலிருந்து வெளிவந்தார்கள். இப்படிப்பட்ட நிலையில் சில மாதங்களுக்கு முன்பு குக் வித் கோமாளி நிகழ்ச்சி முடிந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடர்ந்தது

இப்படிப்பட்ட நிலையில் பிக்பாஸ் சீசன் 6வது நிகழ்ச்சி நேற்றுடன் முடிந்த நிலையில் விரைவில் 4வது சீசன் தொடங்க இருப்பதாக கூறப்பட்டு வந்தது இப்படிப்பட்ட நிலையில் அதற்கான டீசரும் வெளியாகி வைரலானது. இந்த நிலையில் தற்பொழுது வந்துள்ள தகவலின் படி ஜனவரி 28ஆம் தேதி முதல் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 4வது சீசன் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது.

வாரம் தோறும் சனி ஞாயிறு இரவு 9:30 மணிக்கு விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி ஒளிபரப்பாகப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த சீசனில் மணிமேகலை ஜி.பி முத்து, சிங்கப்பூர் தீபன், சுனிதா, மோனிஷா, ரவீனா மற்றும் ஓட்டேரி சிவா ஆகியோர்கள் கோமாளிகளாக பங்கு பெற இருக்கிறார்கள்.

இவர்களை அடுத்து முந்தைய சீசன்களில் இடம்பெற்று இருந்த புகழ், பாலா, குரேஷி, சிவாங்கி ஆகியோர்கள் இந்த சீசனிலும் இருப்பார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இவ்வாறு இந்நிகழ்ச்சிக்காக ரசிகர்கள் மிகவும் ஆர்வமுடன் காத்து வருகிறார்கள்.