பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் பல்வேறு சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது அந்த வகையில் இந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு என்று மக்கள் நல்ல வரவேற்பு கொடுத்து வருகிறார்கள் இந்நிலையில் இந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நாம் இருவர் நமக்கு இருவர் என்ற சீரியல் மிக விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.
இந்த சீரியலில் கதாநாயகனாக செந்தில் மற்றும் நாயகியாக ரக்ஷிதா நடித்து வருகிறார்கள். அந்த வகையில் இந்த சீரியலில் செந்தில் அவர்கள் மாயன் மற்றும் மாறன் ஆகிய இரண்டு வேடங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் மாயனுக்கு மனைவியாக ரக்ஷிதா நடித்து வந்தார்.
இந்நிலையில் 300 எபிசோடுகள் நிறைந்த இந்த சீரியலில் திடீரென ரக்ஷிதா விற்கு பதிலாக மகா கதாபாத்திரத்தில் வேறு ஒரு நடிகையை நடிக்க வைக்க முடிவு செய்துள்ளதாக விஜய் டிவி கோரியுள்ளது.
பொதுவாக ரட்சிதா சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்த அதன்பிறகு ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்து விட்டார் இதை தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான பல்வேறு சீரியல்களிலும் இவர் நடித்துள்ளார் இந்நிலையில் இவர் கடைசியாக நடித்த சீரியல் தான் நாம் இருவர் நமக்கு இருவர்.
பொதுவாக இந்த சீரியலின் ஆரம்பத்தில் ரஞ்சிதாவிற்கு அதிக கதாபாத்திரம் கொடுக்கப்பட்டது ஆனால் சமீபகாலமாக அவர் கொடுக்கும் கதாபாத்திரம் குறைக்கப்பட்டு வருகிறது இதன் காரணமாக சீரியல் குழுவினருக்கும் ரக்ஷிதா விற்கும் மோதல் ஏற்பட்டு அதன் பிறகு ரக்ஷிதா இந்த சீரியலில் இருந்து விலகிவிட்டார்.
இந்நிலையில் தற்போது மகா கதாபாத்திரத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பான அரண்மனைக்கிளி என்ற சீரியலில் நடித்த மோனிஷா அவர்கள் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். இதன் காரணமாக பல நாட்கள் கழித்து மோனிஷா ரீ என்ட்ரி கொடுப்பதன் காரணமாக ரசிகர்கள் மிகுந்த சந்தோஷத்தில் உள்ளார்கள்.