ரசிகர்களை படாதபாடு படுத்திய மொக்க சீரியல் முடிவுக்கு வந்தது.! கொண்டாட்டத்தில் விஜய் டிவி ரசிகர்கள்.

0

பிரபல விஜய் டிவியில் பல சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. பொதுவாக விஜய் டிவி நல்ல தரமான கதை உள்ள சீரியல்களை இயக்கி வருகிறார்கள். மற்ற தொலைக்காட்சிகளை விடவே விஜய் டிவி புதிய  நடிகைகள் மற்றும் நடிகர்கள் மற்றும் கவர்ச்சியில் ஆர்வமுள்ளவர்களை இறக்கி டிஆர்பியில் முன்னணி தொலைக்காட்சியாக திகழ்கிறது.

அந்த வகையில் சற்றே வித்யாசமான நாடகமாக இருக்க வேண்டும் என்பதால் காற்றின் மொழி என்ற சீரியல்களை ஒளிபரப்பி வந்தது.  இந்த சீரியலில் ஹீரோயின் ஊமையாக இருக்கிறார் அவரை எப்படி முழு மனதுடன் ஹீரோ ஏற்றுக் கொள்கிறார் என்பதை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது.

இந்த சீரியலில் ராஜா ராணி சீரியல் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமான சஞ்சீவ் மற்றும் இவருக்கு ஜோடியாக புதுமுக நடிகையை அறிமுகப்படுத்தி உள்ளார்கள். இந்த சீரியல் அறிமுகமான காலகட்டத்தில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வந்தது.

பிறகு போகப்போக ஒரே கதையை மையமாக வைத்து ஒளிபரப்பப்பட்டதால் ரசிகர்களின் நாடகத்தை வெறுத்தார்கள். அந்த வகையில் ரசிகர்கள் இனிமேல் இந்த நாடகத்தை ஒளிபரப்பதீர்கள் என்றும் கேட்டு வந்தார்கள்.

kaatrin-mozhi-serial
kaatrin-mozhi-serial

அந்த வகையில் தற்போது இந்த நாடகம் இறுதி கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.  எனவே ரசிகர்கள் நாங்கள் சொன்னது உங்களது காதில் விழுந்துடுச்சா என்று மகிழ்ச்சியில் குதிக்கிறார்கள்.