விஜய் டிவி புகழ் குக் வித் கோமாளி நடிகருக்கு திருமணம் முடிந்தது!! வைரலாகும் புகைப்படம்.

0

vijay tv fame cook with komali actor gets married photos viral: சின்னத்திரை நடிகர் சாய் சக்தி சன் டிவியில் ஒளிபரப்பான கோலங்கள், நாதஸ்வரம் போன்ற பல சீரியல்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் ரியாலிட்டி ஷோக்களில் தொகுப்பாளராக நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.

பிக் பாஸ் ஜூலி யுடன் இணைந்து ஜோடி ஷோ, மற்றும் கிச்சன் சூப்பர் ஸ்டார் போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். இதனை தொடர்ந்து அவருக்கு  சின்னத்திரையில் வாய்ப்புகள் பெரிதாக வராததால் இவர் வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்று இருந்தார். அங்கும் அவருக்கு பிரச்சினை ஏற்பட்டதால் அங்கிருந்து மீண்டும் இந்தியா திரும்பினார்.

அதன்பின்னர் மீண்டும் இவர் சின்னத்திரையில் வாய்ப்பு தேட ஆரம்பித்தார். இவருக்கு வாய்ப்புகள் எதுவும் கிடைக்காததால் சரியான வருமானம் இல்லை. வருமானம் இல்லாததால் இவரது மனைவியுடன் இவருக்கு அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டது. எனவே இவரின் மனைவியோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர்.

அதன் பின்னர் இவர் தற்கொலை செய்து கொள்ள முயன்றார். அதனைத் தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் இவர் பங்கு பெற்றார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் இவர் மிகப்பெரிய அளவில் பிரபலமாக மாறினார்.

தற்ப்போது இவருக்கு இந்த கொரோனா ஊரடங்கு காலத்தில் மிகவும் எளிமையான முறையில் பெண் வீட்டார் இல்லத்தில் இரண்டாவது திருமணம் நடந்தது. இவரது இரண்டாவது மனைவியின் பெயர் பாத்திமா. தற்போது இவர்களின் திருமண புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

sai sakthi1
sai sakthi1
saisakthi2
saisakthi2
saisakthi3
saisakthi3