வடிவேல் பாலாஜி தனது மகனுக்காக கடைசியாக செய்தது இது தான்!!வைரலாகும் புகைப்படம்.

0

vijay tv fame comedy actor vadivel balaji : கடந்த செப்டம்பர் 10 ஆம் தேதி விஜய் டிவி பிரபலமான கலக்கப்போவது யாரு காமெடி நடிகர் வடிவேல் பாலாஜி மாரடைப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கை கால் செயல் இழக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி காலமானார்.

இந்த செய்தியை அறிந்த அவரது ரசிகர்கள் மற்றும் விஜய் டிவி பிரபலங்கள், திரைப் பிரபலங்கள் என அனைவரையும் வருத்தத்தில் ஆழ்த்தியது. மேலும் பல பிரபலங்கள் அவரது வீட்டிற்கு நேரில் சென்று இரங்கல் தெரிவித்துவிட்டு உதவிகளை செய்தது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே.

மேலும் தற்போது விஜய் டிவியில் அவருக்காக நிகழ்ச்சி ஒன்றை நடத்தினர் அதில் விஜய் டிவி பிரபலங்கள் அனைவரும் அவரின் நினைவுகளை பகிர்ந்துகொண்டனர். இன்னும் அவரை மறக்க முடியாமல் அவருடன் பணி புரிந்தவர்கள் அழுகின்றனர்.

மேலும் வடிவேல் பாலாஜி அவர்கள் கடந்த ஜூலை மாதம் 17-ம் தேதி அவரின் மகனின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். தற்ப்போது அந்த புகைப்படத்தை இன்ஸ்டாக்கிராமில் பதிவிட்டுள்ளனர்.

அந்த புகைப்படத்தை பார்த்த பலர் நீங்க இறந்ததாக இன்னும் எங்களால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை என வருந்தி பதிவிடுகின்றனர். அந்த புகைப்படம் இதோ.

vadivelbalajiactor_1
vadivelbalajiactor_1