ஜீவா சட்டையுடன் ரொமான்ஸ் செய்யும் ப்ரியா.! ஈரமான ரோஜாவே 2 இன்றைய எபிசோட்..

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஏராளமான சீரியல்களில் ஒன்றுதான் ஈரமான ரோஜாவே 2.  இந்த சீரியல் அறிமுகமான சில கால கட்டத்திலேயே டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தை பிடித்தது.  மேலும் இந்த சீரியலில் தொடர்ந்து ஏராளமான திருப்பங்கள் இருந்து வரும் நிலையில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

இப்படிப்பட்ட நிலையில் பிரியா ஜீவாவை ஏற்றுக்கொண்டார்.  ஜீவா பிரியாவிற்காக மாற வேண்டும் என்று நினைத்து வருகிறார். இதனைத்தொடர்ந்து பார்த்திபன் காவியாவை ஏற்றுக்கொண்டாலும் காவியா பிடிவாதமாக டிவோர்ஸ் வேண்டும் என்று கூறி வருகிறார்.

மேலும் அதுவரையும் பிரண்ட்ஸ் ஆக இருக்கலாம் என்று பார்த்திபனிடம் கூறியுள்ளார்.  இப்படிப்பட்ட நிலையில் தற்போது தான் அனைத்து பிரச்சனைகளும் சமாதனமாகிவுள்ளது. மேலும் காவியாவிற்கு பெங்களூரில் எக்ஸாம் என்பதால் பார்த்திபன் மற்றும் காவியா இருவரும் சென்றுள்ளார்கள்.

இந்நிலையில் பிரியா தனது ரூமில் ஜீவாவின் சட்டையைப் போட்டுக் கொண்டு ரொமான்ஸ் செய்து வருகிறார்.  அதனை ஜீவா பார்க்க பிரியா இல்ல சும்மாதான் போட்டு பார்த்தேன் சைஸ் கரெக்டா இருக்கான்னு பார்த்தேன் என்று மழுப்புகிறார்.

மேலும் ஹோம்மில் இருப்பவர்களை ஆண்டுதோறும் டூர் அழைத்து செல்வது வழக்கம் அதேபோன்று இந்த வருடமும் அழைத்து செல்ல வேண்டும் என் கூட நீங்க வந்திங்கனா நல்லா இருக்கும் என்று கூறுகிறார். மேலும் அனைவரும் டூர் செல்கிறார்கள்.

அப்பொழுது பெரிய ராட்டினத்தில் குழந்தை ஒன்று சிக்கிக் கொள்கிறது. அவரை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக தனது உயிரை பணயம் வைத்து ஜீவா அந்த ராட்டினத்தின் மீது ஏறி அந்த குழந்தையை காப்பாற்றுகிறார். இதுதான் இனிவரும் எபிசோடுகள் ஒளிபரப்பாக இருக்கிறது.

Leave a Comment