காவியா போனில் இருக்கும் ஜீவா புகைப்படங்களை பார்த்தா ரம்யா.! பார்த்திபனை ரெஸ்டாரண்டுக்கு அழைத்து செல்லும் காவியா..

விஜய் டிவியில் மிகவும் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல்தான் ஈரமான ரோஜாவே 2. இந்த சீரியல் அறிமுகமான சில வாரங்களிலே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதால் தற்பொழுது டிஆர்பி-யில் முன்னணி வகித்து வருகிறது.

பல பிரச்சனைகளுக்குப் பிறகு  பார்த்திபன் மற்றும் காவியாவுக்கும், ஜீவா மற்றும் பிரியாவிற்கும் திருமணம் நடைபெற்று முடிந்தது.  தற்பொழுது பிரியா தன்னை மாற்றிக்கொண்ட ஜீவாவை காதலித்து வருகிறார் ஜீவா ஓரளவிற்கு மாறி வருகிறார்.

இவர்களைத் தொடர்ந்து பார்த்திபன் காவியாவை ஏற்றுக்கொண்டாலும் காப்பியாவால் பார்த்திபனை ஏற்றுக்கொள்ள முடியவில்லை மேலும் விவாகரத்து பத்திரத்தை பார்த்திபனிடம் கொடுத்து கையெழுத்து போடுமாறு கூற பார்த்திபன் என்னுடன் ஆறு மாதம் இரு அப்பொழுது மனம் மாறவில்லை என்றால் நான் டிவோர்ஸ் தருகிறேன் என்று கூறிவிட்டார்.

இப்படிப்பட்ட நிலையில் சுமங்கலி பூஜை நடக்க இருந்த நிலையில் காவியா கோச்சிங் கிளாஸ் சென்று இருந்த இடத்தில் காவியாவை யாரோ ரூமியில் வைத்து பூட்டி விட்டார்கள். பிறகு பார்த்திபன் காவியாவை கண்டுபிடித்து வீட்டிற்கு அழைத்து வர பார்த்திபன் அத்தை காவியாவை கண்டபடி திட்டுகிறார்.

இப்படிப்பட்ட நிலையில் இன்று வெளியாக உள்ள எபிசோடில் பார்த்திபன் காரில் ஆபீஸ் செல்லும் பொழுது காவியா கோவிலுக்கு போகலாம் என்று கூற இருவரும் கோவிலுக்கு செல்கிறார்கள்.  பிறகு காவியா ரொம்ப பசிக்குது வாங்க ரெஸ்டாரன்ட் போகலாம் என்று கூறுகிறார்.

இந்நிலையில் கேப் ஓட்டுநர் அந்த ரெஸ்டாரன்டுக்கு வர என் ஃபோன் உங்களிடம்தான் இருக்கிறது என்று காவியா கூறுகிறார். அந்த ஓட்டுநர் இல்லை உங்கள் வீட்டில் கொடுத்து விட்டேன் ஒரு பெண் நான் அந்த போனை வாங்கினார் என்று கூறியவுடன் காவியாவிற்கு பயம் ஏற்படுகிறது.

பிறகு பிரியா அந்த போனை வாங்கி இதனால் பார்த்திபனை வேண்டாமென்று கூறுகிறார் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக ஏதாவது ஆதாரம் கிடைக்கும் என்பதற்காகவும் காவியாவின் போனில் உள்ள அனைத்து போட்டோக்கள் மற்றும் வீடியோவை தனது லேப்டாப்பில் ஏற்றுக்கொள்கிறார்.

பிறகு காவியாவிடம் போனை தரும்பொழுது சிரித்துக்கொண்டே தருவதால் காவியா சந்தேகப்படுகிறார்.  இவ்வாறு காவியா போனில் ஜீவாவுடன் எடுத்துக்கொண்ட போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை இருப்பதால் தான் பிரியா சிரிக்கிறாரா என்பது இனிவரும் எபிசோடுகளில் வெளிவர இருக்கிறது.

Leave a Comment