தாலியை கழட்டி தூக்கி எறிந்த கேப்ரில்லா.! அதிர்ச்சியில் ஜீவா..

விஜய் டிவியில் சமீப காலங்களாக ஒளிபரப்பாகி வரும் ஈரமான ரோஜாவே சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு இருந்து வருகிறது. இந்த சீரியலின் முதல் பாகம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இரண்டாவது சீசனையும் ஒளிபரப்பி வருகிறார்கள். இவ்வாறு வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இந்த சீரியல் அறிமுகமான சில வாரங்களிலேயே டிஆர்பி-யில் இடம்பெற தொடங்கியது.

இந்த சீரியலில் முதல் சீசனில் நடித்து வந்த திரவியத்தை மட்டும் வைத்துக்கொண்டு மற்ற அனைத்து நடிகர்,நடிகைகளையும் மாற்றி புதுமுக நடிகர், நடிகைகளை அறிமுகப்படுத்தி உள்ளார்கள். அந்த வகையில் தற்போது ரசிகர்களின் பேவரைட் நடிகையான கேப்ரில்லா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

ஜீவா மற்றும் காவியா இருவரும் தொடர்ந்து பல வருடங்களாக காதலித்து வந்தார்கள் இப்படிப்பட்ட நிலையில் திடீரென்று இவர்களின் குடும்பத்தில் உள்ளவர்கள் ஜீவாவின் அண்ணன் பார்த்திபன் மற்றும் காவியாவின் அக்கா ப்ரீயா இருவருக்கும் திருமணம் செய்து வைக்க முடிவெடுத்தார்கள்.

இவர்கள் இருவருக்கும் திருமணம் நடை பெற்று விட்டால் ஜீவா மற்றும் காவியா இருவரும் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்ளலாம் என்று முடிவில் இருந்து வந்தார்கள். ஆனால் எதிர்பாராத விதமாக பல பிரச்சனைகள் நடைபெற்று ஜீவாவிற்கு பிரியாவையும் காவியாவிற்கு பார்த்திபனையும் திருமணம் செய்து வைத்து விட்டார்கள்.

பிறகு சில நாட்கள் ஆனதும் பார்த்திபன் மற்றும் பிரியா இருவரும் நடைபெற்ற இந்த பிரச்சனையை ஏற்றுக் கொள்ளலாம் என்ற எண்ணத்தில் தங்களது திருமண வாழ்க்கையைத் தொடங்கலாம் என்று நினைத்தார்கள். ஆனால் ஜீவா மற்றும் காவியா இருவரும் தங்களது காதலை மறக்க முடியாமல் தற்பொழுது வரையிலும் வேதனையில் இருந்து வருகிறார்கள்.

இப்படிப்பட்ட நிலையில் அடுத்த வாரத்தில் இந்த சீரியல் எபிசோட் பற்றிய தகவல் வெளிவந்துள்ளது.  அதாவது புதிதாக திருமணமானவர்களுக்கு சில நாட்கள் கழித்து தாலிக்கோக்கும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம் அதேபோல ப்ரியா மற்றும் கேப்ரில்லா இருவருக்கும் தாலி கோர்க்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

அப்பொழுது கேப்ரில்லாவை தாலியை எடுத்துக்காட்டு என்று கூறும்பொழுது வெறும் கயிறு மட்டும் தான் இருக்கிறது இதனை பார்த்த அனைவரும் அதிர்ச்சியில் இருந்து வருகிறார்கள் தாலி எங்கே என்று கேட்டதற்கு காவியா வாயைத் திறக்காமல் இருந்து வருகிறார்.

Leave a Comment