சித்ராவின் மரணத்தை தாங்க முடியாமல் விஜய் டிவி தீனா உருக்கமான பதிவு.! இதோ புகைப்படத்துடன் நீங்களே பாருங்க.!

தொகுப்பாளினி நடிகை என பல திறமைகளைக் கொண்டு வலம் வந்தவர் தான் விஜே சித்ரா இவர் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதன் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானது மட்டுமல்லாமல் இவரது நிகழ்ச்சி பார்ப்பதற்கு ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக வருவார்கள் என்பது பலருக்கும் தெரியும்.

அந்தவகையில் நேற்று இவர் இறந்தார் என்ற செய்தி ரசிகர்களுக்கு வெளிவந்த போது ரசிகர்களை பலரையும் வருத்தத்தில் ஆழ்த்தியது.

மேலும் இவர் நடிப்பில் நாள்தோறும் தொலைக்காட்சி டிவியில் வெளியான சீரியல்தான் பாண்டியன் ஸ்டோர் இந்த சீரியல் விஜய் டிவியில் பரபரப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த சீரியலின் படப்பிடிப்புக்காக ஒரு 5 ஸ்டார் ஹோட்டலில் தங்கியிருந்த இவர் தனது வருங்கால கணவருடன் பேசிக்கொண்டிருக்கும் போதே நான் குளிக்கப் போகிறேன் நீங்கள் போங்க என்று கூறிய பின் பல மணி நேரமாகியும் கதவை திறந்து பார்த்தால் அவர் சடலமாக மின் விசிறியில் தூக்கு மாட்டிக் கொண்டார்.

மேலும் இவருடன் நடித்த பாண்டியன் ஸ்டோர் பல பிரபலங்கள் இவரது மறைவை தாங்க முடியாமல் சமூக வலைதள பக்கங்களில் உருக்கமான தகவலை பகிர்ந்து வருகிறார்கள்.

இந்நிலையில் விஜய் டிவியின் மூலம் பிரபலமான kpy தீனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சித்ரா உடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டது மட்டும்மல்லாமல் நீ இப்படி பண்ணலாமா சித்து எனக்கு ரொம்ப மன உளைச்சலாக இருக்கிறது என பதிவிட்டுள்ளார்.

இவர் பகிர்ந்த பதிவு தற்போது சித்ராவின் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

sithra
sithra

Leave a Comment